300 குடும்பங்களுக்கு உதவி

எண்பத்திரண்டு வயது திரு டான் எங் ஹுவா கடந்த 10 ஆண்டுகளாக சக்­கர நாற்­கா­லி­யில் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் தனது மனை­வி­யைக் கவ­னித்துக்கொள்கிறார். தனது மனைவி­யைக் குளிப்பாட்டி­வி­டு­வது, அவ­ருக்கு சமைத்­துத் தரு­வது போன்ற பணி­களை மேற்­கொண்டு வரு­கி­றார்.

தம்­ப­தி­யாக 60 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக வாழும் இவர்­கள் உட்­பட 300 குடும்­பங்­க­ளுக்­குச் சீனப் புத்­தாண்­டை­யொட்டி அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­பட்­டன. ‘வீகேர் அட் நார்த் வெஸ்ட் - சர்­விஸ் வீக்ஸ்’ எனும் திட்­டத்­தின்­கீழ் வட­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கி­யது. ஆண்­டின் தொடக்­கத்­தில் வசதி குறைந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உத­வு­வது இத்­திட்­டத்­தின் இலக்கு.

ஒவ்­வொரு பையி­லும் சுமார் 90 வெள்ளி மதிப்­புள்ள உண­வுப் பொருள்­கள் இருந்­தன. ஐந்து கிலோ­கி­ராம் எடை­கொண்ட அரிசி உள்ள பையைத் திரு டான் பெற்றுக்­கொண்­டார்.

“சிறிய உத­வி­யாக இருந்­தா­லும் இத்­த­கைய ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யும் கைகொ­டுக்­கிறது,” என்று அவர் தெரி­வித்­தார்.

வட­மேற்கு சமூக மன்­றத்­தின் வர்த்­த­கப் பங்­கா­ளி­யான ‘சிடி­எல்’ எனும் ‘சிட்டி டிவெ­லப்­மெண்ட் லிமிட்­டெட்’, இவ்­வாண்டு ஒன்­பது வீடு­களுக்­குத் தேவை­யான புதிய அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளை­யும் வழங்­கி­யது. சமூ­கத்­திற்­குக் கை­மாறு செய்­யும் கலா­சா­ரம் தனது நிறு­வ­னத்­திற்கு இருந்து வந்­துள்­ள­தாக ‘சிடி­எல்’லின் மூத்த துணைத் தலை­வர் ஃபூ சுய் முய் கூறி­னார். லிம்­பாங்­ பேட்­டை­யில் உள்ள வசதி குறைந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உதவ வட­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து எடுத்து­வரும் நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தனது நிறு­வ­னம் ஆத­ர­வளித்திருப்பதாக அவர் குறிப்­பிட்­டார். இவ்­வாண்டு அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­க தனது நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் முன்­வந்த விதம் பெரும் மகிழ்ச்சி தந்­துள்­ள­தாக அவர் சொன்­னார்.

அட்­மி­ரல்டி, கேன்­பெரா, வுட்­குரோவ் உள்­ளிட்ட பகு­தி­களின் 14 பிரி­வு­களில் இருக்கும் சுமார் 7,300 வீடுகள் இந்த முயற்­சி­யால் பல­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

நிதி அமைச்­ச­ரும் மார்­சி­லிங்-இயூ டீ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு லாரன்ஸ் வோங்­கும் இந்நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டார்.

“கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் பல குடி­யி­ருப்­பாளர்­கள் சவா­லான சூழலை எதிர்­நோக்­கும்­போது இது மிக­வும் அர்த்­த­முள்ள ஒரு நட­வ­டிக்கை என்று நாம் நினைக்கிறோம்.

“அத­னால் கடந்த சில ஆண்டு­களா­கக் கூடு­தல் முயற்­சி­களை எடுத்து வரு­கி­றோம், வசதி குறைந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு மளி­கைப் பொருள்­களை விநி­யோகிக்கிறோம் ­அல்­லது நிதி­யு­தவி வழங்குகிறோம், ஆனால் தனிப்­பட்ட முறை­யில் இதில் ஈடு­ப­டும்­போது அது நல்­ல­தோர் உணர்­வைத் தரு­கிறது,” என்று திரு வோங் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!