இருதரப்பு உறவைச் சித்திரிக்கும் மலர்

சிங்­கப்­பூ­ருக்­கும் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளுக்­கும் இடையே உள்ள வலு­வான உற­வைக் கெள­ர­விக்க மூத்த அமைச்­ச­ரும் தேசி­யப் பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன் ஆர்க்­கிட் மலர் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். 'டென்­ரோ­பி­யம் எக்ஸ்போ 2020 துபாய்' என்­ற­ழைக்­கப்­படும் அந்­த மலர், இயற்கை மீது இரு நாடு­களும் கொண்­டுள்ள அன்­பை­யும் மரி­யா­தை­யை­யும் எடுத்­துக்­காட்­டு­வ­தா­கத் திரு தியோ கூறி­னார். இந்த ஆர்க்­கிட் மலர் சிங்­கப்­பூர் பூம­லை­யில் வளர்க்­கப்­பட்­டது. இதன் இதழ்­களில் மஞ்­சள், ஊதா நிறங்­கள் கலந்­தி­ருக்­கும். 'எக்ஸ்போ 2020 துபாய்' எனும் கண்காட்சி நிகழ்ச்சியில் 'சிங்கப்பூர் தினம்' எனும் அங்கத்தில் திரு டியோ பேசினார்.

ஆறு மாதங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியன்று தொடங்கியது. வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று அது நிறைவுபெறும்.

"நீடித்த நிலைத்­தன்மை அம்­சங்­க­ளைக் கொண்ட வருங்­கா­லத்தை உரு­வாக்­கு­வதை இவ்­விரு நாடு­களும் பெரிய அள­வில் வலி­யு­றுத்­து­கின்­றன.

"நமது தேசத் தந்­தை­கள் விதைத்த இந்­தக் கொள்­கையை இரு நாடு­களும் பின்­பற்றி வரு­கின்­றன," என்று திரு டியோ குறிப்­பிட்­டார்.

"ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் மறைந்த தேசத் தந்­தை­யான மன்­னர் ஷேக் சையது பின் சுல்­தான் அல் நஹ்­யான், தனது நாடு, அதன் வர­லாறு, மரபு ஆகி­ய­வற்­றில் சுற்­றுச்­சூ­ழல் முக்­கி­யப் பங்கு வகிப்­பதா­கக் கூறி­யி­ருக்­கி­றார்.

"சிங்­கப்­பூ­ரில் நமது முதல் பிர­த­மர் லீ குவான் இயூ­வின் கன­வை­யொட்டி 1960களி­லேயே பசு­மை­யான சுற்­றுச்­சூ­ழலை உரு­வாக்­கு­வ­தில் அக்­கறை காட்­டத் தொடங்­கி­னோம், 'நீடித்த நிலைத்­தன்மை', 'பரு­வ­நிலை மாற்­றம்' போன்ற வார்த்­தை­கள் பயன்­பாட்­டிற்கு வரு­வ­தற்­குப் பல காலம் முன்­னரே அதற்­கான முயற்­சியை எடுத்­தோம்," என்­றும் திரு டியோ சுட்­டி­னார். உல­க­ள­வில் கண்­காட்சி நிகழ்ச்­சியை நடத்­தி­ய­தற்­குத் திரு டியோ தனது உரை­யில் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளைப் பாராட்­டி­னார். இத்­த­கைய நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­வது சாதா­ர­ண­மன்று என்­பதை அவர் சுட்­டி­னார். அது­வும் கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் அந்­நாடு இதைச் செய்து காட்­டி­யதை அவர் குறிப்­பிட்­டார்.

'டெண்­ரோ­பி­யம் எக்ஸ்போ 2020 துபாய்' கலப்பு ஆர்க்­கிட் சில நாள்­களுக்கு நிகழ்ச்­சி­யில் வைக்­கப்­பட்டிருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!