பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் இஸ்தானா

சீனப் புத்­தாண்­டை­யொட்டி அடுத்த மாதம் ஐந்­தாம் தேதி­யன்று இஸ்­தானா அதி­பர் மாளிகை பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும். இஸ்­தா­னா­விற்­குச் செல்ல பொது­மக்­கள் முன்­ன­தா­கவே இல­வ­ச­மாக வழங்­கப்­படும் நுழை­வுச்­சீட்டு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­வேண்­டும்.

நாளை முதல் பொது­மக்­கள் நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெற இணை­யத்­த­ளத்­தில் விண்­ணப்­பிக்­க­லாம் என்று இஸ்­தானா நேற்று முன்­தினம் தெரி­வித்­தது.

ஒவ்­வொரு விண்­ணப்­பத்­துக்­கும் அதி­கபட்­ச­மாக ஐவ­ருக்கு நுழைவுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும்.

பார்­வை­யா­ளர்­கள் எத்­தனை மணிக்கு இஸ்­தானா செல்ல விரும்­பு­கின்­ற­னர் என்­பதை விண்­ணப்­பத்­தில் குறிப்­பி­ட­வேண்­டும். காலை ஒன்­பது அல்­லது 11 மணி, மதி­யம் ஒன்று அல்­லது மூன்று ஆகிய வேளை­களில் செல்­ல­லாம். இஸ்­தா­னா­வில் இரண்டு மணி­நே­ரம் இருக்க அனு­மதி உண்டு.

பொது­மக்­கள் வருகை தரும்­போது இஸ்­தா­னா­வில் பாது­காப்பு தூர இடை­வெளி நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருக்­கும். கேளிக்கை, இசைப் படைப்­பு­கள், உணவு விற்­கும் வாக­னங்­கள் போன்­றவை இருக்­காது.

இஸ்­தானா மாளி­கை­யின் வெளிப்­பு­றத் தோட்­டங்­க­ளுக்கு மட்­டுமே பொது­மக்­கள் செல்ல அனு­மதி உண்டு. மாளி­கை­யைச் சுற்­றிக் காட்­டும் நட­வ­டிக்­கை­களும் இம்­முறை இருக்­காது.

பொது­மக்­கள் பாது­காப்பு தூர இடைவெளி விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வதை உறு­தி­செய்ய பாது­காப்பு தூர இடை­வெ­ளித் தூதர்­கள் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.

அரிய இஸ்தானா நினைவுச் சின்னங்களை விற்கும் கூடாரங்கள் எழுப்பப்படும். அவற்றில் அதிபர் சவால் நினைவுச் சின்னங்களையும் வாங்கிக்கொள்ளலாம்.

விற்­ப­னை­யின் மூலம் ஈட்­டப்­படும் தொகை அதி­பர் சவால் நிதித் திட்டம் ஆத­ர­வ­ளிக்­கும் நன்­கொடை நட­வடிக்­கை­க­ளுக்­குப் பயன்­படுத்தப்படும்.

அதி­பர் சவால், சமூ­கத்­தைச் சென்­ற­டைய ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் ஓர் இயக்­கம். இதில் நிதி திரட்டுவதற்கான முயற்சிகளும் அடங்கும்.

எனி­னும், ரொக்­க­மற்ற கட்டண மு­றை­க­ளைக் கொண்டு மட்­டுமே இஸ்தானாவில் நினை­வுச் சின்­னங்­களை வாங்­க­மு­டி­யும்.

இதற்­கு­முன் கடை­சி­யாக சென்ற ஆண்டு தீபா­வ­ளித் திரு­நா­ளன்று நவம்­பர் மாதம் நான்­காம் தேதி­யில் இஸ்­தானா பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டது. அப்­போது சுமார் 2,000 பேர் திரண்­ட­னர்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் கார­ண­மாக 2020ஆம் ஆண்டு தீபா­வ­ளித் திரு­நா­ளை­யொட்டி இஸ்­தானா மாளிகை பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!