டெங்கி பாதிப்பு அதிகரிக்கக்கூடும்

எதிர்­வ­ரும் வாரங்­களில் டெங்­கி­யால் பாதிப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தற்­போது டெங்கி காய்ச்­சலை ஏற்­ப­டுத்­தும் ஏடிஸ் கொசுக்­கள் அதி­க­மாக இருப்­ப­தா­க­வும் அதை அப்­ப­டியே விட்­டு­விட்­டால் டெங்கி பாதிப்பு மோச­ம­டை­யும் என்­றும் வாரி­யம் கூறி­யது.

(DenV-3 ) டெங்கி கிருமி அதி­க­ள­வில் பரவி வரு­வதை வாரி­யம் சுட்­டி­யது.

அதை முறி­ய­டிக்­கத் தேவை­யான எதிர்ப்பு சக்தி சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் பல­ருக்கு இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இம்­மா­தம் 9ஆம் தேதிக்­கும் 15ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலக்­கட்­டத்­தில் 147 பேர் டெங்கி ­யால் பாதிப்­ப­டைந்­த­னர்.

அதற்கு முந்­தைய வாரத்­தில் 105 பேருக்கு டெங்கி காய்ச்­சல் ஏற்­பட்­டது.

கடந்த ஆண்­டில் 5,258 பேர் டெங்கி கார­ண­மாக நோய்­வாய்ப்­பட்­ட­னர்.

டெங்­கி­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை இவ்­வாண்டு அதை­விட அதி­க­மாக இருக்­கும் என்று வாரி­யம் எதிர்­பார்க்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!