செய்திக்கொத்து

கொவிட்-19 விதி மீறல்:

நால்வர் மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 விதிமுறைகளை மீறியதாக 19 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஹர்ஜாஸ் சிங், வில்லியம் அலெக்சாண்டர் புரூக்ஸ்-போட்ஸ், வர்மா புல்கிட், கோட்ரா வெங்கட சாய் ரோஹன்கிருஷ்ணா ஆகிய நால்வரும் கிளார்க் கீயில் நடைபெற்ற புத்தாண்டு ஒன்றுகூடலில் கலந்துகொண்டபோது சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நால்வரும் அடுத்த மாதம் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

பாலியல் சேவை பெற பணம் தந்ததாகக் குற்றச்சாட்டு

பாலியல் சேவை பெறும் நோக்கில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்குப் பணம் தந்ததாக யூடியூப் வலைஒளியில் காணொளிகள் பதிவேற்றம் செய்பவரான டெரல் இயன் கோஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

33 வயது சிங்கப்பூரரான கோஷியின் வழக்கு மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி தடுப்பூசி தரவுகள்; விடுப்பில் செல்ல மருத்துவருக்கு உத்தரவு

சுகாதார அமைச்சிடம் போலி தடுப்பூசி தரவுகளைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவரான ஜிப்சன் குவாவை விடுப்பில் செல்ல தெர்மோ ஃபிஷர் மருந்தியல் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

33 வயது குவாவையும் அவரது மருந்தக உதவியாளரான 40 வயது தாமஸ் சுவாவையும் தடுப்பூசிக்கு எதிரான 'ஹீலிங் தி டிவைட்' எனப்படும் அமைப்பின் நிறுவனரான

46 வயது ஐரிஸ் கோவையும் கைது செய்திருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பைனியர் சாலை தொழில்துறை கட்டடத்தில் தீச்சம்பவம்

பைனியர் சாலை அருகில் உள்ள தொழில்துறை கட்டடத்தில் நேற்று காலை தீ மூண்டது. தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 440 சதுர மீட்டர் பரப்பளவு, ஆறு மீட்டர் உயரம் உள்ள கட்டுமானக் கழிவுப்பொருள்கள் தீப்பிடித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

சிறுமிகளிடமிருந்து பாலியல் சேவை பெற முயன்றதாக

47 வயது அமெரிக்கர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அறிவியலாளராகப் பணிபுரிந்த ஜேசன் ஸ்காட் ஹெர் மீது, 18 வயதுக்குக் குறைந்தவருடன் பாலியல் சேவை பெற முயன்றது, சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களும் ஆபாசக் காணொளிகளும் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவாகின.

சொகுசு கப்பல் பயணங்கள் இவ்வாண்டு தொடங்கக்கூடும்

சிங்கப்பூரர்கள் இவ்வாண்டில் சொகுசு கப்பல் பயணம் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆசியான் நாடுகளின் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!