மின்சைக்கிளால் மூண்ட தீ

சீனப் புத்­தாண்­டுக்கு முதல் நாளன்று தோபாயோ லோரோங் ஆறு வீவக புளோக் 52ல் தீ மூண்­டது. இந்த புளோக்­கின் ஒன்­ப­தாவது மாடி­யில் இருக்­கும் வீட்­டில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

தீ குறித்து கடந்த திங்­கட்­கிழமை இரவு 10.25 மணிக்­குத் தங்­க­ளுக்­குத் தக­வல் வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. பாதிக்­கப்­பட்ட வீட்­டில் இருந்த இரு­வர் உட்­பட 20 பேர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வரு­வ­தற்கு முன்­னரே வீடு­களி­லி­ருந்து வெளி­யே­றிவிட்டனர்.

இச்­சம்­ப­வத்­தால் புகையை நுகர்ந்த இரு­வ­ருக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டது. ஆனால் அவர்­கள் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. வேறு யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை.

மின் சைக்­கிள் ஒன்­றின் மின்­கலன்­க­ளி­லி­ருந்து தீ மூண்­ட­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களுக்­கும் அவற்­றுக்­கான மின்­கலன்­க­ளுக்­கும் அதிக நேரம் அல்லது இரவு முழுவதற்கும் மின்­னூட்­ட­ வேண்­டாம் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஃபேஸ்புக் பதி­வில் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது. போலி­யான மின்­க­லன்­களை வாங்­கவோ பயன்­ப­டுத்­தவோ வேண்­டாம் என்­றும் அது குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!