2026ல் மரினா பே சேண்ட்ஸ் விரிவாக்கம் நிறைவடையும்

மரினா பே சாண்ட்ஸ் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகள் 2026ல் முடியும் என்று லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் மரினா பே சேண்ட்சை US$3.3 பில்லியன் (S$4.45 பில்லியன்) செலவில் விரிவு படுத்தி வருகிறது.

விரிவாக்கம் 2025ல் முடிவடைய இருந்தது.

சுற்றுலா துறை முழுமையாக மீட்சி காணாததே தாமதத்திற்கான காரணம்.

நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ராபர்ட் கோல்ட்ஸ்டெய்ன் இதைத் தெரிவித்தார்.

லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் நிறுவனத்தின் 2021 நான்காவது காலாண்டின் செயல்திறன் பற்றி ஜனவரி 26ஆம் தேதி விளக்கியபோது அவர் இதைக் கூறினார்.

குறிப்பாக மரினா பே சேண்ட்ஸில் உள்ள ஹோட்டல்களில் US$1 பில்லியன் (S$1.35 பில்லியன்) மதிப்புக்குப் புதுப்பிப்புப் பணிகளும் நடந்துவருவதாக அவர் அப்போது கூறினார்.

சிங்கப்பூரில் செயல்படும் இரு ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு வளாகங்களின் விரிவாக்கப் பணிகள் எந்த அளவுக்குத் தாமதமடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஜனவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா தொற்று காரணமாக கட்டுமானத்துறைக்கு இடையூறுகள் ஏற்பட்டன.

இதனால் மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வேர்ல்டு செந்தோசா ஆகிய இரண்டு வளாகங்களில் இடம்பெறும் விரிவாக்கப் பணிகளில் தாமதம் உண்டானது என்று அமைச்சர் கூறினார்.

அதைத் தொடர்ந்து இப்போது இந்தப் புதிய விவரங்கள் தெரியவந்து உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!