அக்கம்பக்கக் கடைகளுக்கு புத்துயிரூட்ட கருத்துக் கூறுக

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புப் பேட்­டைக் கடை­க­ளுக்கு புத்­துயிரூட்­டும் யோச­னை­களை­யும் கருத்­து­க­ளை­யும் சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­கள் வழங்­க­லாம்.

தேசிய வளர்ச்சி அமைச்­சு, இதற்கான ஓர் இணைய ஆய்வை நேற்று முதல் செயல்­ப­டுத்­து­கிறது.

உள்­ளூர் சமூ­கங்­க­ளின் பாரம்­பரிய, கலா­சார பண்பு­க­ளைப் பேணும் அதே வேளை­யில் இந்­தக் கடை­க­ளுக்கு எவ்­வாறு புத்­து­யிர் ஊட்­டு­வது என்­பது குறித்த ஆலோ­ச­னை­க­ளைப் பெறு­வதே ஆய்­வின் நோக்­கம் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தேவை­கள் பரி­ணாம வளர்ச்சி காணும்போது, ​குடி­யி­ருப்­புப் பேட்­டைக் கடை­களை தொடர்ந்து புதுப்­பிப்­ப­தற்­கான வழி­களை ஆராய வேண்­டும். இத­னால் அவை சமூ­கத்­திற்கு பொருத்­த­மா­ன­தா­க­வும், துடிப்­பா­ன­தா­க­வும் அணுக்­க­மா­ன­தா­க­வும் திக­ழும். குறிப்­பாக இணைய விற்­பனை அதி­க­ரித்து வரும் நிலை­யில் இது மிக­வும் அவ­சி­யம்," என்று அமைச்சர் குறிப்­பிட்­டார்.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் அல்லது அவற்­றுக்கு அரு­கில் அமைந்த இந்த அக்­கம்­பக்­கக் கடைகள், குடி­யி­ருப்­பா­ளர்­கள் அன்­றாட அத்­தியா­வ­சிய பொருட்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் பெறு­வ­தற்கு வச­தி­யாக உள்­ளன. மேலும் அக்­கம்­பக்­கங்­க­ளின் தனித்­து­வ­மான தன்மையையும் அடை­யா­ளத்­தை­யும் பிர­தி­ப­லிக்­கின்­றன.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சந்­திக்­க­வும் தொடர்­பு­கொள்வதற்குமான இட­மா­க­வும் உள்ள இந்­தக் கடை­கள், சமூ­கத் தேவைக்­கும் சேவை ஆற்­று­கின்­றன என்று அவர் மேலும் கூறி­னார்.

இந்­தக் கடை­கள், குறிப்­பாக சமூக நிறு­வ­னங்­கள், உள்­ளூர் மற்றும் சமூ­கத்­தில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வேலை வாய்ப்­பு­களை­யும் அல்­லது வள­ரும் தொழில்­முனை­வோ­ருக்­கான இடத்­தை­யும்­கூட வழங்கமுடி­யும் என்­றார் அமைச்­சர்.

நகர மையங்­கள், அக்­கம்­பக்­கப் பகு­தி­கள், வட்­டா­ரக் கடைத் தொகுதி­களில் ஏறக்­கு­றைய 15,000 கடை­களை வீவக கொண்­டுள்­ளது.

அவை வீவ­க­வால் வாட­கைக்கு விடப்­ப­டு­கின்­றன அல்­லது தனி­யா­ருக்­குச் சொந்­த­மாக உள்­ளன.

வீவக கடை­க­ளின் சமூக, பொரு­ளி­யல் மதிப்பு, உள்­ளூர் சமூ­கங்­க­ளுக்கு அவை தரக்­கூ­டிய நன்­மை­கள், கொவிட்-19 இந்­தக் கடை­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திய பாதிப்பு ஆகி­ய­வற்­றைக் கண்­ட­றிய எட்டு மாத திட்­டத்­திற்­கான ஒப்­பந்­தக் குத்­த­கையை வீவக கடந்த ஜன­வரி­யில் தொடங்­கி­யது.

அக்­கம்­பக்­கக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வர்த்­தகங்­களை மறு ஆய்வு செய்ய, குறிப்­பாக, பலர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் கொவிட்-19 சூழ­லில் இது தகுந்த தரு­ணம் என்று வர்த்­தக சங்­கங்கள் சம்மே­ள­னத் தலை­வ­ரான திரு இயோ ஹியாங் மெங் கூறி­னார்.

"பொது­வாக தங்­க­ளு­டைய குடியி­ருப்­புப் பகு­தியை அதி­கம் அறி­யாத குடி­யி­ருப்­பா­ளர்­களும் அக்­கம்­பக்­கக் கடை­கள் என்ன சலுகை­கள் வழங்­குகின்றன என்று இப்போது பார்க்கத் தொடங்­கி­யுள்­ள­னர். வர்த்­த­கங்­கள் இதைப் பயன்­படுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!