192,000 குழந்தைகள் தடுப்பூசி போட்டனர்

ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான 192,000க்கும் மேற்­பட்ட குழந்­தை ­க­ளுக்கு குறைந்­தது ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. 56,000க்கும் மேற்­பட்ட குழந்­தை­ க­ளுக்கு இரண்­டா­வது முறை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அதே சம­யத்­தில் பிப்­ர­வரி 27ஆம் தேதி­யி­லி­ருந்து குழந்­தை­ க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­கள் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கப்­படும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இதன் தொடக்­கமாக நன்­யாங், குவீன்ஸ்­ட­வுன் சமூக மன்­றங்­களில் செயல்­படும் குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­கள் மூடப்­படும்.

இம்­மாத இறு­தி­யி­லி­ருந்து குழந்­தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­ வதற்­கான தேவை குறை­யும் என்­ப­தால் இத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்படு­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது. இரு நிலை­யங்­கள் மூடப்­படும் வரை சுகா­தார அமைச்­சின் தேசி­யப் பதிவு இணை­யத்­த­ளத்­தில் அந்த நிலை­யங்­க­ளுக்­கான முன்­ப­திவு தொடர்ந்து ஏற்­றுக் கொள்­ளப்­படும்.

ஆனால் அடுத்த திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து முன்­ப­திவு செய்­யா­மல் இரு நிலை­யங்­க­ளி­லும் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள முடி­யாது.

ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான 300,000க்கும் மேற்­பட்ட குழந்தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் தேசிய இயக்­கத்தை கடந்த டிசம்­பர் 27ஆம் தேதி அர­சாங்­கம் தொடங்­கி­யது.

அது­மு­தல் நான்­கில் மூன்று பங்­கி­னர் தடுப்­பூ­சிக்­குப் பதிந்­து­கொண்­ட­னர். பத்­தில் ஏழு குழந்­தை­கள் குறைந்­தது ஒரு­மு­றை­யா­வது தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். அடுத்த மாதம் இரண்­டா­வது தடுப்­பூசி போடு­வ­தி­லும் இந்த நிலையை எட்ட முடி­யும் என்று அமைச்சு நம்­பிக்கை தெரி­வித்­தது.

பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 18,500 குழந்­தை­களும் தடுப்­பூ­சிக்­குப் பதிந்து கொண்­ட­தா­க­வும் அவர்­களில் 13,000 குழந்­தை­கள் குறைந்­தது ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர் என்­றும் அமைச்சு மேலும் தெரி­வித்­தது.

ஒட்­டு­மொத்­த­மாக இது­வரை 250,000 முறை தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. இதில் ஜன­வரி கடைசி வாரத்­தில் மட்­டும் சாதனை அள­வாக ஏறக்­கு­றைய 60,000 குழந்தை­ க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.

இதற்­கி­டையே 12 முதல் 17 வயது வரை­யி­லான சிறார்­க­ளுக்குக் கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) போடும் பணியை அதி­கா­ரி­கள் தொடங்­கி­யுள்­ள­னர்.

இதன் ஒரு பகு­தி­யாக 16, 17 வய­து­களில் உள்ள சிறார்­கள் முத­லில் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளு­ மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்ளனர்.

"மருத்­து­வ­ரீ­தி­யாக தகுதி பெற்ற அனை­வ­ரும் பூஸ்­டர் தடுப்­பூ­சியை போட்­டுக் கொள்­ளு­மாறு நாங்­கள் ஊக்­கு­விக்­கி­றோம்," என்று நேற்றைய அறிக்­கை­யில் அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு வர முடி­யாத மாண­வர்­க­ளுக்­காக சிறப்பு கல்வி நிலை­யங்­க­ளுக்கு நட­மா­டும் தடுப்­பூசி குழு அனுப்பி வைக்­கப்­படும் என்று அது கூறி­யது. இரு தடுப்பூசி நிலையங்கள் மூடப்பட்ட பிறகு 13 தடுப்பூசி நிலையங்கள் எஞ்சியிருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!