சில்லறை விற்பனை துறையில் உற்சாகம்

சிங்கப்பூர் சில்லறை விற்பனை துறை மூன்று ஆண்டுகள் சரிவுக்குப் பிறகு மீண்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் விற்பனை 11% கூடியது.

கொள்­ளை­நோய் பர­வ­லால் பாதிக்­கப்­பட்ட சில்­லறை விற்­ப­னைத் துறை 2020ல் 15.3 விழுக்­காடு சரி­வைச் சந்­தித்­தது. ஆனால் 2021ல் அதன் வளர்ச்சி அதற்கு நேர்­மாறாக அமைந்­துள்­ளது.

கடந்த ஆண்டு டிசம்­பர் பண்டி கைக் காலத்தில் விற்­பனை எதிர்­பா­ராத அளவு அதி­க­ரித்­துள்­ளதை புள்­ளி­யி­யல் பிரிவு வெளி­யிட்ட விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்ற ஆண்டு டிசம்­ப­ரில் மட்­டும் சில்­லறை விற்­பனை, 2020ஆம் ஆண்­டின் இதே காலக்­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 6.7 விழுக்­காடு அதி­க­ரித்­தது. புளூம்­பெர்க் ஆய்­வா­ளர்­கள் 4.6 விழுக்­காடு அள­வுக்கு விற்­பனை அதி­க­ரிக்­கும் என்று கணித்­தி­ருந்­த­னர். ஆனால் அதை­யும் தாண்டி அமோக விற்­பனை நடந்­துள்­ளது.

மோட்­டார் வாக­னங்­கள் நீங்­க­லாக, 2021ஆம் ஆண்­டு நவம்பர் மாத 4.5 விழுக்­காடு வளர்ச்­சி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் சில்­லறை விற்­பனை 8.6 விழுக்­காடு கூடி­யது.

இதனைச் சுட்டிக்காட்டிய ஓசிபிசி தலைமை பொருளியல் நிபுணரான செலினா லிங், தனியார் பயனீடு அதிகரித்துள்ளதை இது காட்டு வதாகத் தெரிவித்தார்.

ஒமிக்ரான் தொற்றுப் பிரச்சினை இருந்தபோதிலும் இவ்வாண்டு ேமம்பட்ட வளர்ச்சி மற்றும் தொழி லாளர் சந்தையை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.

இருந்தாலும் 2022ல் இரட்டை இலக்கு வளர்ச்சியை எதிர்பார்ப்பது சிரமம் என்று அவர் கூறினார்.

"வருகையாளர்கள் அதிகரித் தால் மட்டுமே இது சாத்தியமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது," என்று மேலும் அவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் சில்லறை விற்பனைத் துறையின் பெரும் பாலான பிரிவுகளில் அதிக வளர்ச்சி பதிவானது.

கைக்கடிகாரம், நகைகளின் விற்பனை 27.4 விழுக்காடு அதி கரித்தது. பெட்ரோல் நிலையச் சேவைகள் 23.6 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதற்கு பெட்ரோல் விலை உயர்வு ஒரு காரணமாக இருக்கலாம் என்று புள்ளியியல் பிரிவு கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!