சிங்கப்பூர்-சீனா வலுவான உறவுக்கு மறுஉறுதி

அதி­பர் ஹலிமா யாக்­கோப் பிப்­ரவரி 4ஆம் தேதி 24வது குளிர்­கால ஒலிம்­பிக் தொடக்க நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­டார். சீன அதி­ப­ரும் அவ­ரின் துணை­வி­யாரும் அளித்த வர­வேற்பு விருந்­தி­லும் நேற்று அதி­பர் கலந்­து­கொண்­டார் என்று வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சீனப் பிர­த­மர் லீ கெச்சி­யாங்கும் அதி­பர் ஹலி­மா­வும் நேற்று சந்­தித்­த­னர். சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடைப்­பட்ட வலு­வான உறவை இரு தலை­வர்­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர்.

பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­பில் நல்ல உத்வே­கம் ஏற்­பட்டு வரு­வதை அவர்­கள் வர­வேற்­ற­னர்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், பசு­மைப் பொரு­ளி­யல், இயற்கை வள மேம்­பாடு போன்ற புதிய துறை­களில் இடம்­பெ­றும் இரு நாட்டு ஒத்­து­ழைப்­பை­யும் அவர்­கள் இரு­வ­ரும் வர­வேற்­ற­னர்.

இருதரப்பு ஒத்­து­ழைப்பை இன்­னும் வலுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் தயாராக இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா சீனப் பிர­த­ம­ரி­டம் எடுத்­துக் கூறி­னார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் விமா­னப் பய­ணம் முழு­மை­யா­கத் தொடங்­கு­வ­தை­யும் இரு நாட்டு மக்­க­ளுக்கு இடை­யில் பரஸ்­பர பய­ணங்­கள் இடம்­பெ­று­வ­தையும் காண­ சிங்­கப்­பூர் ஆர்­வ­மு­டன் இருக்­கிறது என்று அதி­பர் தெரி­வித்­தார். அதி­பர் இன்று சீன அதி­ப­ரைச் சந்­திக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!