திரைப்பட மோகத்தால் உயிர்பெற்ற வர்த்தகங்கள்

இளையர்கள் நாடும் 'சட்டைக்காரசாமி'

சக்தி மேகனா

ரஜி­னி­காந்­தைப் போல துடிப்­பு­டன், என்­றும் இள­மைத் துள்­ள­லு­டன் இருக்க விரும்­பு­வோ­ருக்­கா­கவே 'சட்­டைக்­கா­ர­சாமி' வர்த்­த­கம் அதன் டி-சட்­டை­களை வடி­வமைத்து வரு­கிறது. கறுப்பு, வெள்ளை நிறங்­களில் ரஜி­னி­யின் உரு­வத்­து­டன் 'சூப்­பர்ஸ்­டார் எனர்ஜி' என்ற வார்த்­தை­க­ளைப் பதித்து விற்­ப­னை­யா­கும் இந்த டி-சட்­டை­கள், நிச்­ச­யம் அணி­ப­வ­ருக்­குப் புத்­து­ணர்ச்சி ஊட்­டும் என்­பது வர்த்­த­கத்­தைத் தொடங்­கிய நண்­பர்­கள் அர­விந்த்­கு­மார், ஜ ச சசி­கு­மார் ஆகி­யோ­ரின் நம்­பிக்கை ஆகும்.

டி-சட்­டை­க­ளைத் தயா­ரிக்க முடிவு செய்­த­தும் இரு­வ­ரும் பல வெளி­நாட்­டுச் சட்­டைத் தயா­ரிப்­பு­களை ஆராய்ந்­த­னர். குறைந்த விலை­யில் டி-சட்­டை­க­ளைத் தயாரிப்­ப­தற்­காக வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளி­டம் பேசி­னர். ஆனால், கொவிட்-19 சூழல் கார­ண­மாக வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சட்­டை­களை இறக்­கு­மதி செய்­வது சாத்­தி­ய­மா­க­வில்லை.

எனவே, உள்­ளூ­ரி­லேயே சட்­டைத் தயா­ரிப்பு நிறு­வ­னம் ஒன்­றைத் தேடி­னர். சில­ரி­டம் பேசி, கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய விலை­யில் முத­லில் 50 டி-சட்­டை­களைத் தயா­ரித்­த­னர்.

இரு­வ­ரும் சென்ற ஆண்டு 'இன்ஸ்­ட­கி­ராம்' வழி 'சட்­டைக்­கா­ர­சாமி' வர்த்­த­கத்­தைத் துவங்­கி­னர்.

அறி­மு­க­மான சில நாள்­க­ளி­லேயே அவர்­கள் தயா­ரித்த 50 சட்­டை­களும் விற்­றுத் தீர்ந்­து­விட்­டன.

"நாங்­கள் ஒரு­நாள் சாதா­ர­ண­மாக பேசிக்­கொண்டு இருந்­த­போது 'சட்­டைக்­கா­ர­சாமி' என்ற சொல் எங்­க­ளுக்­குத் தோன்­றி­யது. அது மிக­வும் புது­மை­யான பெய­ராக இருந்­த­தால் அதையே எங்­கள் வர்த்­த­கத்­தின் பெய­ராக வைத்­தோம்," என்று வின்­சா­னிட்டி நிறு­வ­ன­ரும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் வணி­கத் துறை மாண­வ­ரு­மான அர­விந்த்குமார், 27, மற்­றும் தேசிய கல்­விக்­ க­ழ­கத்­தில் படிக்­கும் ஜ ச சசி­கு­மார், 29, ஆகி­யோர் கூறி­னர்.

"சிங்­கப்­பூ­ரின் வெப்­ப­நி­லைக்கு ஏற்ற, உயர்­த­ர­மான பருத்­தித் துணி­யில் டி-சட்­டை­யைத் தயா­ரித்­தி­ருக்­கி­றோம். சட்­டை­க­ளு­டன் ரஜினி ஒட்­டு­வில்­லை­க­ளை­யும் வழங்­கு­கி­றோம். சட்­டை­களை அணி­யும் அனை­வ­ரும் வாழ்க்­கை­யில் ரஜி­னி­யைப் போல் உற்­சா­கம் குறை­யா­மல் உயர்­வ­டைய வேண்­டும் என்­பது எங்­க­ளின் நோக்­கம்," என்­ற­னர் நண்­பர்­கள். இணை­ய­வழி சட்டை உற்­பத்தி செய்­ப­வர்­கள் சிலரை அணுகி, சட்­டை­யின் தரம், விலை ஆகி­ய­வற்றை ஒப்­பிட்­டுத் தங்­க­ளின் சட்­டை­க­ளுக்கு உயிர் தந்­தார்­கள்.

"நாங்­கள் நினைத்­த­தை­விட அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் எங்­கள் சட்­டை­களை வாங்­கு­வ­தற்­காக முன்­ப­திவு செய்­தி­ருந்­தார்­கள். அத­னால், தொடக்­கத்­தி­லேயே எங்­க­ளால் லாபம் காண முடிந்­தது," என்று கூறி­னர். நன்கு திட்­ட­மிட்டு, இணைந்து செயல்­பட்டு தங்­க­ளது படிப்­பை­யும் 'சட்­டைக்­கா­ர­சாமி' வர்த்­த­கத்­தை­யும் சமா­ளித்து வரு­கி­றார்­கள் நண்­பர்­கள்.

"இது­வரை 70 சட்­டை­களை விற்­று­விட்­டோம். அதிக இளை­யர்­கள் முன்­ப­திவு செய்து சட்­டை­களை வாங்­கு­கின்­ற­னர். எதிர்­காலத்­தில் மாதத்­திற்கு ஒரு­முறை நாங்­கள் புதிய பொருள்­க­ளைச் சந்­தை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தத் திட்­ட­மிட்டு உள்­ளோம். அதில் ஒன்­று­தான் 'டோட்' பைகள். இவை நிச்­ச­ய­மாக மக்­க­ளைக் கவ­ரும் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்­றார் அர­விந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!