அரசாங்கத்தின் பசுமை இலக்குகளை எட்டுவதற்கான மருத்துவமனைகளின் திட்டங்கள்

கூ டெக் புவாட் மருத்துவமனை 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட உறுதிபூண்டுள்ளது. பூமியைக் குணப்படுத்துவதற்கான ஐக்கிய நாட்டு நிறுவனப் பிரசார இயக்கத்தின் கீழ், சிங்கப்பூரில் அத்தகைய கடப்பாட்டைத் தெரிவித்திருக்கும் ஒரே மருத்துவமனை அது என்று ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் அறிகிறது.

தென்கிழக்காசியாவிலிருந்து ‘ரேஸ் டூ ஸீரோ’ இயக்கத்தில் பங்குபெறும் நான்கு மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. 21 நாடுகளில் 11,500க்கும் அதிகமான மருத்துவமனைகளைப் பிரதிநிதிக்கும் 50க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் அதில் பங்கேற்கின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைப்பதும் 2050க்குள் அறவே இல்லாமல் ஆக்குவதும் இலக்குகள்.

பொதுத் துறை நிறுவனங்களின் பசுமைத் திட்டம் பற்றியும், 2025ஆம் ஆண்டு வாக்கில் கரியமில வாயு வெளியேற்றம் உச்சத்தை எட்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் சென்ற ஆண்டு தெரிவித்திருந்தது.

அதன் தொடர்பிலான நடவடிக்கைகளில், சாத்தியமான அனைத்து இடங்களிலும் சூரியச் சக்தித் தகடுகளை அமைத்தல், இப்போதுள்ள அரசாங்க வாகனங்களுக்குப் பதிலாகத் தூய்மை எரிபொருள் பயன்படுத்தும் வகை வாகனங்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவருதல் போன்றவையும் அடங்கும்.

தற்போதைய கொவிட்-19 சூழலுக்கிடையிலும் இங்குள்ள பொது மருத்துவமனைகள் அரசாங்கத்தின் GreenGov.SG திட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கூ டெக் புவாட் மருத்துவமனை, அதன் அருகில் உள்ள ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவற்றின் கூரைகளில் சூரியச் சக்தித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஓர் ஆண்டில் 456 மெகாவாட் தூய்மை எரிசக்தியைத் தயாரிக்க வல்லவை. அது, ஈசூன் சுகாதாரப் பராமரிப்பு வளாகத்தின் ஓராண்டுக்கான எரிபொருள் தேவையில் ஒரு விழுக்காட்டிற்குச் சமம். ஈசூன் குளத்தைச் சுற்றியுள்ள தெரு விளக்குகளுக்கான எரிசக்தியையும் தயாரிக்கும் வகையில் அந்தத் திட்டம் விரிவாக்கம் காணும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட சிங்கப்பூரின் மற்ற மருத்துவமனைகளும், அத்தகைய சில முயற்சிகளில் இறங்கியுள்ளன. சூரியச் சக்தித் தகடு பொருத்தும் திட்டத்தை மேற்கொள்ளவும், குளிர் சாதனங்கள் வெளியிடும் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றி, அதைக் கொண்டு மின்-வாகனங்களுக்கான மின்னூட்ட வசதிகளை அமைக்கவும் அவை திட்டமிடுகின்றன.

சாங்கி பொது மருத்துவமனை சூரியச் சக்தித் தகடுகள் மூலம், 2017இல் இருந்து ஆண்டுக்குச் சுமார் 50 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது. மருத்துவமனையின் ஓராண்டுக்கான மின்சாரப் பயன்பாட்டில் அது ஒரு விழுக்காடு. 25ஆண்டுக் காலத்தில் 800 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அந்த மருத்துவமனையின் திட்டங்கள் கைகொடுக்கும். மேலும், குளிர் சாதனங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தை வீணாக்காமல், குளியல் அறைகளுக்கும், கிருமிநீக்கத்திற்குமான வெந்நீர்த் தேவையை ஈடுகட்ட அது பயன்படுத்துகிறது.

ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஈடாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையும், உலகின் ஆக அதிகக் கரியமில வாயு வெளியேற்றும் துறையாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 92 விழுக்காடு, மின்சாரம், எரிவாயு, வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் கட்டமைப்புகள், கழிவு நிர்வாகம் போன்றவற்றின் மூலம் வெளியாகிறது. அதனால் சுகாதாரப் பராமரிப்பு நிலையக் கட்டடங்களில் புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் வளங்களைப் பயன்படுத்தும்படிப் பரிந்துரைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!