தற்காப்பு அமைச்சர் தொற்றால் பாதிப்பு

தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென் குண­ம­டைந்து வரு கிறார். நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தொற்று ஏற்­பட்­டது குறித்து அவர் விவ­ரித்து இருந்­தார்.

திரு இங், ஏற்­கெ­னவே பூஸ்­டர் உட்­பட மூன்று தடுப்­பூசி களைப் போட்­டுக்கொண்­ட­வர். இந்த நிலை­யில் அவர் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்ட்­டார்.

ஃபேஸ்புக் பக்­கத்­தில் ஐந்து நாள் அனு­ப­வத்தை ஒவ்­வொரு நாளாக அவர் பகிர்ந்­து­கொண்­டார். "முதல் நாள் இரு­ம­லு­டன் தொடங்­கி­யது. வழக்­க­மான ஓட்­டப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டேன். புத்­து­ணர்ச்­சி­யு­டன் இருந்­தது. பின்­னர் காணொளி வாயி­லாக சில சந்­திப்­பு­களில் பங்­கேற்­றேன். ஏஆர்டி சோதனை செய்­த­போது தொற்று இருப்­ப­தைக் காட்­டி­யது. அன்று காய்ச்­சல் இல்லை. அதே சம­யத்­தில் சரி­யான தூக்­க­மும் இல்லை. இரண்­டா­வது நாள் நல்­ல­வி­த­மா­கத் தொடங்­கி­யது. தொற்று மித­மாக இருக்­கும் என்று எதிர்­பார்த்­தேன். ஆனால் பின்­னர் தீவி­ர­மா­னது. மாலை­யில் 38.5 டிகிரி செல்­சி­யஸ் வரை காய்ச்­சல் ஏற்­பட்­டது. நுரை­யீ­ரல் பாதிப்பு இல்லை. ஆக்­ஸி­மீட்­ட­ரில் 98 விழுக்­காடு காட்­டி­யது. சில இரு­மல் மருந்­து­களை எடுத்­துக் கொண்­டேன். அன்று நன்­றா­கத் தூங்­கி­னேன். நான்­கா­வது நாளில் தொண்டை எரிச்­சல் தவிர மற்­ற­படி உடல்­நிலை நன்­றாக இருந்­தது. ஐந்­தா­வது நாளில் ஏஆர்டி சோத­னை­யில் தொற்­றின் தீவி­ரம் குறை­வாக இருந்­த­தைக் காட்­டி­யது," என்று அமைச்­சர் ஹெங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!