சர்ச்சையால் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் மூடல்

இர்ஷாத் முஹம்மது

இன்­னும் ஓராண்­டில் 100வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­ட­வி­ருந்த சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கம், இரு தரப்­பி­ன­ருக்கு இடையே ஏற்­பட்ட சர்ச்­சை­யால் மூடப்­பட்­டது.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற ஆண்டு பொதுக் கூட்­டத்­தின்­போது பொது உறுப்­பி­னர்­கள் சிலர், பல அம்­சங்­கள் குறித்து நடை­முறை பிரச்­சி­னை­கள் உள்­ள­தால் அதில் தெளி­வு­பெற கேள்­வி­கள் எழுப்­பி­னர். அதன் கார­ண­மாக கூட்­டத்தை நிர்­வா­கக் குழு ஒத்­தி­வைத்­தது.

நிர்­வா­கக் குழு அந்த விளக்­கங்­க­ளுக்குச் சட்ட ஆலோ­சனை பெற்று வரு­வ­தா­கச் சங்­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

உறுப்­பி­னர்­கள் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிலை­யில் இருப்­பதை தாம் அறி­வ­தா­க­வும் அத­னால் சங்­கத்தை மூட நிர்­வா­கக் குழு முடிவு செய்­த­தா­க­வும் அறிக்­கை­யில் சங்­கத்­தின் தலை­வர் வி‌ஷ்ணு பிள்ளை குறிப்­பிட்­டார்.

சங்­கம் மூடப்­ப­டு­வ­தோடு அனைத்து நட­வ­டிக்­கை­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­படும் என்­றும் எழுப்­பப்­பட்ட பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­படும்வரை­ யிலா­வது இந்த நிலை நீடிக்­கும் என்­றும் நம்­பு­வ­தாக அறிக்கை தெரி­வித்­தது.

சங்­கத்­தின் வெவ்­வேறு பொறுப்­பு­க­ளுக்­கும் நிர்­வா­கத்­திற்­கும் எவர் பொறுப்­பேற்­பது என்­பது குறித்து தெளிவு பெற­வேண்டி உள்­ள­தை­யும் அறிக்கை சுட்­டி­யது.

1923ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் வர­லாறு நீண்ட நெடி­யது. பாலஸ்­டி­யர் சாலை­யில் அமைந்­துள்ள அதன் கட்­ட­டத்­திற்கு, 1950ஆம் ஆண்­டில் அன்­றைய இந்­தி­யப் பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு­அடிக்­கல் நாட்டினார்.

மறைந்த இந்­திய குடி­ய­ர­சுத் தலை­வர் அப்­துல் கலாம், காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் திரு ராகுல் காந்தி போன்­ற­வர்­கள் தங்­க­ளின் சிங்­கப்­பூர் வரு­கை­யின்­போது அச்­சங்­கத்­தின் கட்­ட­டத்­திற்கு வரு­கை­ய­ளித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் விளை­யாட்டு வர­லாற்­றில் முக்­கிய இடத்­தைப் பிடித்­தி­ருந்த இச்­சங்­கம் பல விளை­யாட்டு வீரர்­க­ளின் பயிற்சித்­ த­ள­மாக விளங்­கி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் சமூக, கலா­சார, உடல், அறி­வாற்­றல், பொது நல­னைக் கருத்­தில் கொண்டு அவற்றை மேம்­ப­டுத்­த­வும் ஊக்­கு­விக்­க­வும் நோக்­கம் கொண்டு தொடங்­கப்­பட்­டது இச்­சங்­கம். பிரச்­சி­னை­கள் குறித்து மாறு­பட்ட கருத்­து­கள் நில­வி­னா­லும் இந்­தி­யர் சங்­கத்­தின் மீது அனை­வ­ரும் மதிப்­பும் மரி­யா­தை­யும் வைத்­துள்­ள­னர் என்­ப­தைத் தாம் அறி­வ­தாக சங்­கத்­தின் தலை­வர் வி‌‌ஷ்ணு பிள்ளை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

சங்­கத்­தின் தலை­வர் திரு வி‌ஷ்ணு பிள்ளை தரப்­பிற்­கும் துணைத் தலை­வர் திரு தமிழ் மாறன் தரப்­பிற்­கும் இடை­யில் இந்த சர்ச்சை ஏற்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!