செய்திக்கொத்து

கொவிட்-19 தொற்று சற்றே கூடியது

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிதாக உள்ளூரில் 10,542 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் 367 அதிகம். புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 2,578 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலமும் மற்ற 7,964 பேருக்கு ஏஆர்டி சோதனை மூலமும் கிருமி தொற்றியிருப்பது தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 144 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொவிட்-19 பாதிப்பு 439,640ஆகவும் அதனால் மாண்டோர் எண்ணிக்கை 882ஆகவும் உயர்ந்துவிட்டது. இதனிடையே, நேற்று முன்தின நிலவரப்படி கொரோனா தொற்றுக்காக 1,212 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை, அதற்கு முந்திய நாளைவிட 17 அதிகம். தீவிர சிகிச்சைப் பிரிவில் 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 115 பேருக்குச் செயற்கைச் சுவாச உதவி தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது நாளாக 1,000க்குமேல் இருந்து வருகிறது. கடந்த புதன்கிழமை இரண்டாக இருந்த வாராந்திர தொற்று உயர்வு விகிதம், மறுநாள் வியாழனன்று 2.26ஆகக் கூடிவிட்டது.

2ஆம் காலாண்டிற்கான மசே நிதி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மத்திய சேம நிதிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் மசே நிதிக் கழகமும் அறிவித்துள்ளன. 2022 ஏப்ரல்-ஜூன் மாதங்களில், 55 வயதிற்கும் குறைவான மசே நிதி உறுப்பினர்களின் சாதாரணக் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டிற்கு 3.5% வட்டி வழங்கப்படும். சிறப்பு, மெடிசேவ் கணக்குகளுக்கு 5% வரை வட்டி வழங்கப்படும். 55 மற்றும் அதற்குமேல் வயதுடைய மசே நிதி உறுப்பினர்களுக்கு, ஒட்டுமொத்த இருப்புத்தொகையில் முதல் 30,000 வெள்ளிக்குக் கூடுதலாக 2 விழுக்காடும் (சாதாரணக் கணக்கிற்கு அதிகபட்சம் $20,000) அடுத்த $30,000க்கு மேலும் ஒரு விழுக்காடும் வட்டி வழங்கப்படும். அதாவது, அவர்களின் ஓய்வுக்கால இருப்புத்தொகைக்கு 6% வரை வட்டி கிடைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!