‘சிஓபி அறிக்கையை அரசியலாக்கும் முயற்சி வருந்தத்தக்கது’

முன்­னைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் மன்­றத்­தில் பொய்­யு­ரைத்­த­தன் தொடர்­பில் சிறப்­பு­ரி­மை­கள் குழு வெளி­யிட்ட அறிக்­கை­யின் தக­வல்­கள் எல்­லா­ரும் பார்க்­கக்­கூ­டிய உண்­மை­யான சான்­று­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டவை என்று நாடாளுமன்ற நாய­கர் டான் சுவான் ஜின் கூறி­யுள்­ளார்.

நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மை­கள் குழு கண்­ட­றிந்த தக­வல்­கள் பற்­றி­யும் அதன் பரிந்­து­ரை­கள் பற்­றி­யும் அடுத்த வாரம் மன்­றத்­தில் வெளிப்­ப­டை­யாக விவா­திக்­கப்­பட்டு. மன்­றம் அது குறித்து முடிவு எடுக்க உள்­ளது.

அதற்கு முன்­னரே இந்த விவ­கா­ரத்தை அர­சி­யல் ஆக்­கும் முயற்­சி­கள் வருந்­தத்தக்­கவை என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

இது குறித்து நாடா­ளு­மன்ற நாய­கர் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

எட்­டுப் பேர் அடங்­கிய சிறப்­பு­ரி­மை­கள் குழு­வுக்கு திரு டான் தலைமை தாங்­கு­கி­றார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யில் இருந்த முன்­னைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் மன்­றத்­தில் பொய்­யு­ரைத்த விவ­கா­ரத்­தில், அவ­ருக்கு $35,000 அப­ரா­தம் விதிக்­க­ வேண்­டும் என்று நாடாளு­ மன்ற சிறப்­பு­ரி­மை­கள் குழு நேற்று கூறி­யி­ருந்­தது.

அத்­து­டன் திரு பிரித்­தம் சிங், திரு ஃபைசல் மனாப் ஆகி­யோரை கூடு­தல் விசா­ரணை செய்ய வேண்­டும் என்று கூறி இந்த விவ­கா­ரத்தை அர­சாங்க வழக்­க­றி­ஞ­ரி­டம் ஒப்­ப­டைப்­ப­தாக அறிக்கை கூறி­யது.

இவற்றை பெரும் கவ­லை­ யுடன் கருத்­தில் எடுத்­துக் கொள்­வ­தா­கப் பாட்­டா­ளிக் கட்சி நேற்று காலை தெரி­வித்­தது.

பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு எதி­ராக குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை கடை­சி­யாக 1980களில் கொண்­டு­வ­ரப்­பட்­டது என்­றும் அக்­கட்சி குறிப்­ப­டப்­பட்­டது.

சிறப்­பு­ரி­மை­கள் குழு­வின் பரிந்­து­ரை­க­ள் திரு பிரித்­தம், திரு ஃபைசல் இரு­வ­ரின் அர­சி­யல் பணி தொடர்பானது என்று பாட்­டா­ளிக் கட்­சி­யின் அறிக்கை ­காட்­டு­வ­தாக திரு டான் தெரி வித்தார்.

இது ஜன­நா­யக சமூ­கத்தை உரு­வாக்­கும் பணியை பாதிக்­கும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!