‘ஏஆர்டி’ ஆற்றலை பரிசோதிக்க ஆய்வு

'ஏஆர்டி' எனப்­படும் ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னை­யின் செயல்­தி­ற­னைப் பரி­சோ­திக்க அதி­கா­ரி­கள் ஆய்வு ஒன்றை நடத்தி வரு­கின்­ற­னர்.

சாங்கி விமான நிலை­யத்­தில் சிங்­கப்­பூர் வரும் பய­ணி­க­ளி­டம் 'ஏஆர்டி' சுய­ப­ரி­சோ­தனை எந்த அள­வுக்கு ஆற்­ற­லு­டன் செயல்­படும் என்­பதை அறி­வதே ஆய்­வின் நோக்­க­மா­கும்.

சுகா­தார அமைச்சு நடத்­தும் ஆய்­வின் ஒரு பகு­தி­யாக கடந்த சில வாரங்­க­ளாக சிங்­கப்­பூ­ருக்கு வரும் பல பய­ணி­க­ளுக்கு ஏர்­ஆர்டி சோத­னைக் கரு­வி­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த ஜன­வரி மாதம் 'விடி­எல்' திட்­டத்­தின் கீழ் இஸ்­தான்­புல்­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த பயணி ஒரு­வ­ருக்கு 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கருவி வழங்­கப்­பட்­டது.

இதன் தொடர்­பில் அவ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட சுகாதார அமைச்சின் சுற்­ற­றிக்­கையை 'மைல்­ல­யன்' எனும் சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்ட சுற்­றுலா இணை­யப் பக்­கம் பகிர்ந்­து­கொண்­டது. அதில், "அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னை­யின் செயல்­தி­றனைக் கண்­கா­ணிக்­கும் முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக சிங்­கப்­பூர் சுகா­தார அமைச்சு ஆய்வு ஒன்றை நடத்தி வரு­கிறது.

ஓமிக்­ரான் பர­வும் சூழ­லில் ஏஆர்­டி­யின் பயன்­பாட்டை புரிந்­து­கொள்­வ­தற்­காக இந்­தச் சோதனை நடத்­தப்­ப­டு­கிறது. இது. எங்­க­ளு­டையே பரி­சோ­தனை கொள்­கை­க­ளுக்கு வழி­காட்­டி­யாக அமை­யும். உங்­க­ளு­டைய ஒத்­து­ழைப்­புக்கு நன்றி தெரி­விக்­கி­றோம்," என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

வீடு அல்­லது குறிப்­பிட்ட தங்­கு­மி­டத்­துக்கு வந்து சேர்ந்­த­தும் அதே நாளில் 'ஏஆர்டி' சோத­னை­யைச் செய்து முடி­வு­களை தாளில் அச்­சி­டப்­பட்­டுள்ள 'கியூ­ஆர்' குறி­யீட்­டின் இணைப்பு மூலம் சமர்ப்­பிக்க வேண்­டும் என்று சுற்­ற­றிக்கை மேலும் தெரி­வித்­தது.

'மைல்­ல­யன்' ஆசி­ரி­ய­ரும் நிறு­வ­ன­ரு­மான ஆரோன் வோங்­கும் 'ஃபிளோஃபிளக்ஸ்' ஏஆர்டி சோத­னைக் கரு­வி­க­ளைப் பெற்­றுள்­ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை பேங்­காக்­கி­லி­ருந்து திரும்­பிய அவ­ருக்­கும் அதேபோன்ற சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. அவர் 'ஸ்கூட்' விடி­எல் பாதை­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­தார். இரு­வ­ருக்­கும் 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கருவி இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டா­லும் பிசி­ஆர் சோத­னையை செய்­வது அவ­சி­யம். 'அபோட் பான்­பியோ', 'ஃபிளோஃபிளக்ஸ்' தவிர 'பிடி' சோத­னைக் கரு­வி­களும் சோதிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!