வாழவேண்டும் என்ற துணிச்சலைத் தந்த காதல்

முதன்­மு­த­லில் ஃபேஸ்புக் வழி­யாக இந்­தி­ரா­ணி­யும் கார்த்­தி­கே­ய­னும் அறி­மு­க­மா­கி­னர். அவர்­களி­டையே மலர்ந்த நட்பு, காத­லாக கனிந்து வந்த நேரத்­தில் எவ­ரும் எதிர்­பார்க்­காத அதிர்ச்சி. நீரி­ழிவு நோயால் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டார் 37 வயது இந்­தி­ராணி. ஆபத்­தான நிலை. வாழ்க்கை முடிந்­து­வி­டுமோ என்று துவண்டு போயிருந்தார் இந்­தி­ராணி பெரு­மாள்.

அந்­தத் தரு­ணத்­தில் அவர் கையைப் பிடித்­த­வாறு, "உன்­னு­டன் நான் இறு­தி­வரை இருப்­பேன். என்­னு­டன் நீயும் இருப்­பாய்," என கார்த்தி ­கே­யன் கூறி­னார்.

அந்­தச் சொற்­கள், வாழ வேண்­டும் என்ற வைராக்­கி­யத்தை இந்­தி­ரா­ணிக்­குத் தந்­தன. எதி­லும் நிதா­ன­மாக உள்ள கார்த்­தி­கே­ய­னும் எளி­தில் உணர்ச்­சி­வ­சப்­படும் இந்­தி­ரா­ணி­யும் குணத்­தில் இரு துரு­வங்­கள்.

"விட்­டு­கொ­டுக்­கும் குணம், அன்பை வெளிப்­ப­டுத்­தும் தன்மை இவை இரண்­டுமே எங்­க­ளைப் பிணைத்­துள்­ளன," என்று இரு­வ­ரும் பகிர்ந்­து­கொண்­டார்­கள்.

கார்த்­தி­கே­ய­னுக்­குக் கடி­தங்­கள் எழு­து­வ­து­டன் பல­கா­ரங்­கள், பிடித்­த­மான பொருள்­கள் ஆகி­ய­வற்றை எதிர்­பா­ராத வேளை­களில் அன்­பளிப்­பா­கக் கொடுப்­பா­ராம் இந்­தி­ராணி.

வாழ்க்­கைத் தொழில் குறித்து கார்த்­தி­கே­யன் குழம்­பி­ய­போது, "வீட்டு நிர்­வா­கத்தை நான் கவ­னித்­து­கொள்­கி­றேன், உங்­க­ளுக்­குப் பிடித்த துறை­யைப் பொறு­மை­யா­கத் தேர்ந்­தெடுங்­கள்," என இந்­தி­ராணி கூறி­யது தனக்கு உந்­து­த­லாக இருந்­தது என்­றார் கார்த்­தி­கே­யன் சந்­தி­ரன்.

திரு­ம­ண­மாகி எட்­டா­வது ஆண்டு நிறைவை இவ்­வாண்டு கொண்­டாட இருக்­கி­றார்­கள் இந்த அன்­புள்­ளங்­கள்.

"வாழ்க்­கை­யின் சிறு சிறு தரு­ணங்­க­ளை­யும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் அன்­றா­டம் கொண்­டா­டு­கிறோம். அத­னால் ஒவ்­வொரு நாளும் எங்­க­ளுக்கு அன்பர் தினமே," என்­ற­னர் இந்­தி­ராணி-கார்த்­தி­கே­யன் தம்­ப­தி­யர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!