மோசடி இணையத்தளங்களை விரைந்து முடக்க செயற்கை நுண்ணறிவு

பொது­மக்­கள் மோச­டிக்கு ஆளா­கா­மல் பாது­காக்­கும் பொருட்டு, 'ஏஐ' எனப்­படும் செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­

ப­டுத்தி மோசடி இணை­யத்­த­ளங்­களை விரை­வா­கக் கண்­டு­பி­டித்து அவற்­றைத் தடை­செய்­வது குறித்து அர­சாங்க அமைப்­பு­கள் ஆராய்ந்­து ­வ­ரு­கின்­றன.

தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­

க­ளு­டன் இணைந்து அவை அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அத்­து­டன், தேசி­யக் குற்­றத் தடுப்பு மன்­ற­மும் இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்­குள் சிறப்பு 'வாட்ஸ்­அப்' தொடர்­பு­வ­ழி­யைத் தொடங்­கும்.

மோசடி இணை­யத்­த­ளங்­கள் குறித்த தக­வல்­க­ளைப் பொது­மக்­க­ளி­டம் இருந்து பெற்­றுக்­கொள்­வது அதன் நோக்­கம் என்­றார் அமைச்­சர் டியோ.

தொடர்­பு சாத­னக் கட்­ட­மைப்பு ­க­ளின் மூலம் மோச­டிக்­கா­ரர்­கள், எளி­தில் ஏமா­று­வோரை அணு

­கா­மல் தடை­செய்­வது அர­சாங்­கத்­தின் நட­வ­டிக்­கை­களில் ஒன்று என்­றார் அவர்.

தொலை­பேசி அழைப்­பு­கள் அல்­லது குறுஞ்­செய்­தித் தக­வல்­க­ளைக் காட்­டி­லும், மோசடி இணை­யத்

­த­ளங்­களே ஏமாற்­று­வே­லை­களில் பெரும்­பங்கு வகிக்­கின்­றன என்­

ப­தைத் திரு­மதி டியோ சுட்­டிக்­

காட்­டி­னார்.

அறி­வார்ந்த தேசம், இணை­யப் பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான அவர், இணைய மோசடி தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­களில் பத்­தில் ஒன்பது பேர் அன்­றா­டம் இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­. அவர்­

க­ளைப் பாது­காக்­கும் பொருட்டு, தக­வல்­தொ­டர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் காவல்­து­றை­யும் இணை­யச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தாக அமைச்­சர் டியோ சொன்­னார்.

"2020ல் சந்­தே­கத்­துக்­கு­ரிய சுமார் 500 மோசடி இணை­யத்­

த­ளங்­கள் முடக்­கப்­பட்­டன. சென்ற ஆண்டு அந்த எண்­ணிக்கை 12,000க்கும் அதி­கம்.

"போலி­யான இணை­யத்­த­ளங்­கள் மூலம் சென்ற ஆண்டு டிசம்­ப­ருக்­கும், இந்த ஆண்டு ஜன­வ­ரிக்­கும் இடையே மோச­டிக்­கா­ரர்­கள் ஓசி­பிசி வங்கி வாடிக்­கை­யா­ளர்­கள் 790 பேரி­டம் 13.7 மில்­லி­யன் வெள்­ளியை ஏமாற்­றி­யுள்­ள­னர்.

"அதன் தொடர்­பில் 350க்கும் மேற்­பட்ட இணை­யத்­த­ளங்­கள் முடக்­கப்­பட்­டா­லும் மோச­டிக்­கா­ரர்­கள் புதிது புதி­தாக போலித் தளங்­களை உரு­வாக்­கு­கின்­ற­னர்.

"எனவே, செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­

ப­டுத்­து­தல், மோசடி தொடர்­பான 'வாட்ஸ்­அப்' தொடர்­பு­வழி ஆகி­யவை மோச­டி­க­ளைக் கையாள்­

வ­தற்­கான அர­சாங்­கத்­தின் செயல்­தி­றனை வலுப்­ப­டுத்­தும்," என்று அமைச்­சர் டியோ குறிப்­பிட்­டார்.

"மோச­டிக்­கா­ரர்­கள் வெளி­நா­டு­களில் இருந்து அழைக்­கும் தொலை­பேசி அழைப்­பு­களை இனங்­கண்டு அவற்­றைத் தவிர்க்­கும் முயற்­சி­யும் வலுப்­ப­டுத்­தப்­படும்.

"இப்­போது மாதத்­திற்கு அத்­த­கைய 15 மில்­லி­யன் அழைப்­பு­கள் தவிர்க்­கப்­ப­டு­கின்­றன. அந்த எண்­ணிக்­கையை 55 மில்­லி­ய­னுக்கு உயர்த்த ஆவன செய்­யப்­ப­டு­கிறது" என்­றார் அமைச்­சர்.

ஏற்­கெனவே '+' குறி­யீட்­டு­டன் தொடங்­கும் உள்­ளூர்த் தொலை­பேசி எண், மோச­டிக்­கா­ரர்­கள் வெளி­நாட்­டி­லி­ருந்து மேற்­கொள்­ளும் ஏமாற்­று­வேலை என்று அடை­யா­ளம் காண உத­வு­வதை அவர் சுட்­டி­னார். 2020 ஏப்­ர­லில் இருந்து அந்த நடை­முறை நடப்­பில் உள்­ளது.

புதிய நடை­மு­றை­கள் நடப்­புக்கு வரச் சில காலம் ஆக­லாம். மோச­டித் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளால் கூடு­தல் செல­வும், வச­திக்­கு­றை­வும் ஏற்­பட்­டா­லும் பொது­மக்­களை மோச­டி­யில் இருந்து காப்­ப­தற்கு அவை அவ­சி­யம் என்று அமைச்­சர் டியோ வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!