சில மணி நேரங்களில் தீர்ந்த பயணச் சீட்டுகள்

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இைடயே தடுப்­பூசி போட்­டுக் கொண்­டோ­ருக்­கான 'விடி­எல்' தரை வழி பயண ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த ஏற்­பாட்­டின்கீழ் முழு அளவில் ேபருந்து பய­ணச் சீட்­டு­களை விற்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து புதன், வியா­ழன் ஆகிய இரு நாட்­களில் சில மணி நேரங்­களில் 40,000க்கும் மேற்­பட்ட பய­ணச்­சீட்­டு­கள் விற்­கப்­பட்­டன.

இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர்-மலே­சிய பய­ணம் அனு­ம­திக்­கப்­பட்­டது.

பேருந்து நடத்­து­நர்­களில் ஒன்று, மார்ச் 21ஆம் தேதி வரையி லான பய­ணங்­க­ளுக்கு பேருந்து சீட்­டு­கள் விற்று முடிந்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்தது­.

சிங்­கப்­பூ­ரின் டிரான்ஸ்­டார் டிரா­வல் நிறு­வ­னம், பிப்­ர­வரி 22 முதல் மார்ச் 21 வரை பய­ணம் செய்­வ­தற்­கான கூடு­தல் பய­ணச் சீட்­டு­களை புதன்­கி­ழமை மாலை ஆறு மணிக்கு விற்க ஆரம்­பித்­தது. மாலை எட்டு மணி அள­வில் 40 விழுக்­காடு பய­ணச்­சீட்­டு­கள் விற்­கப்­பட்­டன. நள்­ளி­ர­வுக்­குள் அனைத்து சீட்­டு­களும் விற்று முடிந்­தன என்று ஸ்ட்ெரய்ட்ஸ் டைம்­சி­டம் அந்த நிறு­வ­னத்­தின் ேபச்­சா­ளர் ெரிவித்­தார்.

இந்த நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரின் உட்­லண்ட்­சுக்­கும் ஜோகூர் பாரு­வில் உள்ள லார்­கின் சென்ட்­ர­லுக்கு இைடயே தற்­போது 24 'விடி­எல்' பேருந்து சேவை­களை நாள்­தோ­றும் வழங்கி வரு­கிறது. இது, இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து 48 சேவை­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட விருக்­கிறது. ஒவ்­வொரு பேருந்­தி­லும் 45 பேர் வரை பய­ணம் செய்­ய­லாம்.

மலே­சிய பேருந்து நடத்­து­ந­ரான காஸ்­வே­லிங்க், சென்ற வியா­ழக்­கி­ழமை காலை பத்து மணி­யி­லி­ருந்து கூடு­தல் விடி­எல் பய­ணச்­சீட்­டு­களை விற்க ஆரம்­பித்­தது. ஆனால் பிப்­ர­வரி 22 முதல் பிப்­ர­வரி 28 வரையிலான பய­ணங்­ களுக்கு மட்­டுமே அது பய­ணச்­சீட்­டு­களை விற்­றது.

ஒன்­றரை மணி நேரத்­தில் 7,560 பய­ணச்­சீட்­டு­களும் விற்றுத் தீர்ந்தன என்று அந்த நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் குறிப்பிட்டார்,

மார்ச் மாதத்­திற்­கான கூடு­தல் பய­ணச் சீட்­டு­களுக்கான விற்­பனை விரை­வில் ெதாடங்­கும் என்­று அவர் சொன்­னார்.

"முன்­ப­திவு நடை­மு­றை­களை மேம்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கிறது. அதன் பிறகு விற்­ப­னை­யைத் தொடங்குவோம்," என்­றார் அவர்.

இந்த நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் உள்ள குவீன் ஸ்தி­ரீட்­டுக்­கும் ஜோகூர் பாரு­வில் உள்ள லார்­கின் சென்ட்­ர­லுக்­கும் இடையே தற்­போது 30 பேருந்து சேவை­களை வழங்கி வரு­கிறது.

வரும் 22ஆம் தேதி­யி­லி­ருந்து 60 சேவை­க­ளாக அதி­க­ரிக்­கப்­படும் என்று நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

சிங்­கப்­பூர்-மலே­சிய பய­ணச் சீட்­டுக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­ட­தால் கூடு­தல் பய­ணச்­சீட்­டு­கள் வெளி­யி­டப்­பட்­டன. நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்து பய­ணச்­சீட்­டு­களை வாங்க முடி­யாத பலர் தங்­க­ளு­டைய வெறுப்­பை­யும் ஏமாற்­றத்­தை­யும் சமூக ஊட­கங்­கள் வழி­யா­கக் காட்­டி­யி­ருந்­த­னர். பயணச்சீட்டுகளை வாங்கி சிலர் இணையம் வழியாக 100 வெள்ளிக்கு மேல் விற்பதாகவும் புகார்கள் எழுந்தன.

பெரியவர்களுக்கான ஒரு வழிப் பேருந்து கட்டணம் சிங்கப்பூரில் $15 ஆகவும் மலேசியாவில் 20 ரிங்கிட் (S$6.40) ஆகவும் உள்ளன.

தரைவழி விடிஎல் பயணத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி முதல் முறையாக அறிமுகம் கண்டது.

ஒவ்வொரு நாளும் 2,880 பயணிகள் வரை ஜோகூர் பாலத்தைக் கடந்து ெசல்ல அனு மதிக்கப்பட்டனர். பின்னர் 4,320 வரை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 20 முதல் ஜனவரி 20 வரை புதிய பயணச் சீட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டது. ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து பேருந்து சேவைகளும் பாதியாகக் குறைக்கப் பட்டன. ஓமிக்ரான் கிருமிப்பரவலின் எதிரொலியாக பயணச் சீட்டு விற்பனை பாதிக்கப் பட்டது. சென்ற புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வெளிநாட்டிலி ருந்து வருபவர்களால் உள்ளூரில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால் தரைவழி பயணத்தை முழுமையாக அனுமதிப்பதாக சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!