‘ஊடகச் சட்டங்கள் இருந்தாலும் செய்தியாளர்கள் நிபுணத்துவ முறையில் பணியாற்ற முடியும்’

சிங்­கப்­பூ­ரி­லும் சரி வேறு இதர சமூ­கங்­க­ளி­லும் சரி கருத்­து­க­ளைத் தெரி­விக்க தடை­யற்ற சுதந்­தி­ரம் கிடை­யாது.

ஊட­கத்தை ஒழுங்கு படுத்த சட்­டங்­கள் இருக்­கின்­றன.

இந்த நிலை­யி­லும் சிங்­கப்­பூர் ஊட­கம் நல்ல நிபு­ணத்­து­வப் பணியை ஆற்ற அதிக வாய்ப்பு இருக்­கிறது. அந்­தப் பணியை அது ஆற்றி வரு­கிறது என்று செய்­தித்­து­றை­யில் பழுத்த அனு­ப­வம் வாய்ந்த திரு பேட்­ரிக் டேனி­யல் தெரி­வித்து இருக்­கி­றார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் மூன்று விரி­வு­ரை­களில் முதல் விரி­வு­ரையை, சிங்­கப்­பூரை ஆராய்­வ­தற்­கான எஸ் ஆர் நாதன் ஆய்­வா­ளர் என்ற முறை­யில் திரு டேனி­யல் நேற்று உரை ஆற்றி னார்.

எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் நிறு­வ­னத்­தின் இடைக்­கால தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்றி வரும் திரு டேனி­யல், தனிப்­பட்ட முறை­யில் தான் உரை­யாற்­று­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

ஊட­கத்­தின் பணி பற்­றி­யும் அது கொண்­டுள்ள சுதந்­தி­ரம் குறித்­தும் ஐந்து கேள்­வி­களை திரு டேனி­யல் முன்­வைத்­தார்.

ஊட­கம் நல்ல நிபு­ணத்­து­வப் பணி­யைச் செய்­வ­தற்கு சட்­டங்­கள் அனு­ம­திக்­கின்­ற­னவா; பொறுப்­புள்ள கண்­கா­ணிப்­புப் பணிக்கு வாய்ப்பு உள்­ளதா; ஊட­கம் நாட்டு உரு­வாக்­கப் பணியை ஆற்ற வேண்­டுமா; யோச­னை­க­ளுக்­கான சந்தை; அதிக அள­வி­லான பன்­மய கருத்­து­கள், கண்­ணோட்­டங்­களை அனு­ம­திக்க தேவைப்­படும் மாற்­றங்­கள் யாவை ஆகிய கேள்­வி­களை திரு டேனி­யல் முன் வைத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் செய்­தித்­தாட்­கள் மற்­றும் ஒளி­ப­ரப்­பா­ளர்­க­ளின் உரிமை நிர்­வா­கம் மற்­றும் நிதி வளம் ஆகி­ய­வற்றை ஒழுங்­கு­ படுத்து­வ­தற்­கான பல்­வேறு சட்­டங்­கள் பற்றி குறிப்­பிட்ட திரு டேனி­யல், அத்­த­கைய சட்­டங்­க­ளின் வரம்­புக்கு உட்­பட்டு தன்­னு­டைய பணியை ஆற்ற வேண்டி இருப்­பதே சிங்­கப்­பூர் ஊட­கத்­தின் சவால் என்­றார்.

"சட்­டங்­கள் இருந்­தா­லும் நம் ஊட­கத்­தில் நூற்­றுக்­க­ணக்­கான செய்­தி­யா­ளர்­கள், நல்ல செய்தி யாளர்­கள் நம் ஊட­கத்­தில், செய்தி அறை­களில் இருக்­கி­றார்­கள்.

"அவர்­கள் அன்­றா­டம் நல்ல தர­மான பொருள்­பொ­திந்த பணி­களை ஆற்றி வரு­கி­றார்­கள்," என்று திரு டேனி­யல் குறிப்­பிட்­டார்.

பொறுப்­புள்ள கண்­கா­ணிப்­புப் பணிக்கு வாய்ப்பு இருக்­கி­றதா என்­பது பற்றி கருத்­து­ரைத்த அவர், இருக்­கிறது என்று தான் நம்பு வதாக கூறி­னார்.

இருந்­தா­லும் அது ஒன்றே ஊட­கத்­தின் பணி­யாக இருக்க இய­லாது என்­றார் அவர்.

சமூ­கம் அல்­லது நாட்டு உரு­வாக்­கப் பணியை ஊட­கம் ஆற்ற வேண்­டுமா என்­பது பற்றி கருத்­து­ரைத்த திரு டேனி­யல், அதற்கு சிங்­கப்­பூர் ஊட­கம் எதி­ரா­னது அல்ல என்­றார்.

இருந்­தா­லும் அது ஒன்றே அதன் பணி­யாக இருக்க முடி­யாது என்­றும் அவர் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, கொவிட்-19 தொற்­றின்­போது ஊட­கம் சமூ­கப் பணி­யாற்­றி­யதை திரு டேனி­யல் குறிப்­பிட்­டார்.

யோச­னை­க­ளின் சந்தை இடம் என்ற எண்­ணம் குறித்து கருத்து கூறிய அவர், இளைய மற்­றும் முதிய சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே அதிக பன்­மய கருத்து, கண்­ணோட்­டங்களுக்­கான விருப்­பம் அதி­க­மாகி வரு­கிறது என்று தெரி­வித்­தார்.

பன்­மய கண்­ணோட்­டங்­கள் அதி­க­ரிக்க என்­னென்ன மாற்­றங்­கள் தேவை என்­பது பற்றி குறிப்­பிட்ட திரு டேனி­யல், நடு­நி­லை­யான வழி ஒன்­றைத் தேர்ந்­தெ­டுப்­பது எப்­படி என்­ப­தும் பன்­ம­யத்­திற்­கும் நியா­யத்­திற்­கும் பாடு­ப­டு­வது எப்­படி என்­ப­துமே சவால் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!