சில்வியா லிம்முக்கு ஆலோசனை

தன்­னு­டைய ஐஃபோன், அரசு பொறுப்­பா­த­ரவு பெற்ற ஊடு­ரு­வ­லுக்கு இலக்­காகி இருக்­கக்­கூ­டும் என்று ஆப்­பிள் நிறு­வ­னத்­தி­டம் இருந்து தனக்கு எச்­ச­ரிக்கை வந்­த­தாக பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­வியான சில்­வியா லிம் தெரி­வித்து இருந்­தார்.

இது மிகக் கடு­மை­யான புகார். தேசிய பாது­காப்­பில் இது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு உள்­ளது என்பதால் இதுபற்றி ஆராய திரு­வாட்டி லிம்­மு­டன் தொடர்­பு­கொள்­ளும்­படி உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் காவல்­து­றை­யைக் கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றார் என்று அறிக்கை ஒன்றில் காவல்­துறை பேச்­சா­ளர் நேற்று தெரி­வித்­தார்.

அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு­வாட்டி லிம்­மிற்கு காவல்­துறை ஒரு கடி­தம் எழுதி இருக்­கிறது. காவல்­து­றை­யி­டம் புகார் தெரி­விக்­கும்­படி திரு­வாட்டி லிம்­மிற்கு அதில் ஆலோ­சனை கூறப்­பட்டு உள்­ளது.

திரு­வாட்டி லிம் புகார் தெரி­விக்க விரும்­ப­வில்லை என்­றால் அவர் தனது கைப்பே­சி­யைக் காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­க­லாம். அதன்­மூ­லம் அது பற்றி பரி­சோ­தனை நடத்த முடி­யும் என்று அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். அந்­தப் பரி சோதனை நடத்த, இந்­தத் துறையில் ஆற்­றல் வாய்ந்த வர்த்­தக நிறு­வனம் ஒன்றை நிய­மிக்­கும்­படி காவல் துறைக்கு அமைச்­சர் சண்­மு­கம் உத்­த­ர­விட்டு இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!