வேலைவாய்ப்பு மோசடி பற்றி காவல்துறை எச்சரிக்கை

திரைப்­பட நுழை­வுச் சீட்­டு­களை விற்­றுத் தந்­தால் தர­குத் தொகை தரு­வ­தாக ஏமாற்­றும், வேலை மோசடி குறித்­துக் காவல்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

பொது­மக்­கள் அது­கு­றித்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்று நேற்று வெளி­யிட்ட ஆலோ­சனைக் குறிப்பில் அது கேட்­டுக்­கொண்­டது.

சென்ற மாதத்­தில் இருந்து இது­வரை அத்­த­கைய 189 மோச­டிச் சம்­ப­வங்­க­ளைக் கண்­ட­றிந்­த­தா­கக் காவல்­துறை குறிப்­பிட்­டது.

மோச­டிக்­கா­ரர்­கள் முத­லில் குறுஞ்­செய்தி மூலம் நட்பு அழைப்பு விடுப்­பார்­கள். பின்­னர் திரைப்­பட நுழை­வுச் சீட்டு விற்­ப­னையை அதி­க­ரிக்க உத­வு­வ­தன் மூலம் தர­குத் தொகை ஈட்ட வகை­செய்­வ­தா­கக் கூறு­வார்­கள்.

அதற்கு ஒப்­புக்­கொண்­டால், இணை­யத்­தள முக­வரி ஒன்று 'வாட்ஸ்­அப்' மூலம் அனுப்­பி­வைக்­கப்­படும்.

அதில் கணக்கு தொடங்கி, பணம் செலுத்­தும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வர். பிறகு, அறி­மு­க­மற்­ற­வர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் பணம் செலுத்­தும்­படி வலி­யு­றுத்­தப்­ப­டு­வர்.

வேலையை முடித்­த­வு­டன், மோசடி இணை­யத் தளத்­தில் உரு­வாக்­கப்­பட்ட கணக்­கில் அதற்­கான தொகை சேர்க்­கப்­பட்­ட­தா­க­வும் காட்­டும்.

ஆனால் அந்­தப் பணத்தை எடுக்க இய­லா­மல் போன பிறகே தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை அவர்­கள் உணர்வார்கள் என்று காவல்­துறை தெரி­வித்­தது.

குறை­வான உழைப்­புக்கு அதி­க­மான ஊதி­யம் தரும் வேலை­களை ஏற்க வேண்­டாம் என்­றும், சரி­பார்க்­கப்­ப­டாத தளங்­களில் இருந்து செயலி­க­ளைப் பதி­வி­றக்­கம் செய்ய வேண்­டாம் என்­றும் பொது­மக்­களுக்கு அது அறி­வு­றுத்­தி­யது.

அறி­மு­க­மற்ற யாருக்­கும் ஒரு­போ­தும் பணம் அனுப்­ப­ வேண்­டாம் என்­றும் காவல்­துறை ஆலோ­சனை கூறி­யது.

அத்­த­கைய குற்­றங்­கள் தொடர்­பான மேல் விவ­ரங்­க­ளுக்கு, 1800-255-0000 என்ற 24 மணி நேரச் சேவை வழங்­கும் எண்ணை நாட­லாம். அவ­சர உத­விக்கு 999 என்ற எண்­ணை­யும் அழைக்­க­லாம்.

அல்­லது மோச­டித் தடுப்­புக்­கான 24 மணி நேரத் தொலை­பே­சிச் சேவையை 1800-722-6688 என்ற எண்­ணில் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!