மூலாதார பணவீக்கம் ஜனவரியில் 2.4% 2012 செப்டம்பருக்குப் பிறகு இதுவே ஆகஅதிகம்

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம், அதா­வது விலை­வாசி ஜன­வ­ரி­யில் தொடர்ந்து அதி­க­ரித்­தது. பண­வீக்­கம் கொஞ்ச காலத்­திற்­குக் கூடி பிறகு குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குடி­யி­ருப்பு, தனி­யார் போக்­கு­வரத்­துச் செலவை நீக்­கி­விட்டு கணக்­கி­டப்­படும் மூலா­தார பண­வீக்­கம் மேலும் அதி­க­ரித்து ஆண்டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் சென்ற மாதம் 2.4%க்கு கூடி­யது. இது டிசம்­ப­ரில் 2.1% ஆக இருந்தது.

இதற்கு முன் கடந்த 2012 செப்­டம்­பர் மாதம்­தான் பண­வீக்­கம் 2.4% அள­வுக்கு அதி­க­மாக இருந்­தது.

அதற்­குப் பிறகு கடந்த ஜன­வரி­யில்­தான் அந்த அள­வுக்கு அது கூடி­யது.

உணவு, மின்­சா­ரம், எரி­வாயு செலவு கூடி­யதே பண­வீக்­கம் அதி­கரித்­ததற்­கான முக்­கிய கார­ணம். அதோடு, சில்­லறை மற்­றும் இதர பொருட்­க­ளுக்­கான செலவு மெது­வா­கக் குறைந்­த­தும் கார­ணம்.

வர்த்­தக தொழில் அமைச்­சும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் கூட்டு அறிக்­கை­யில் இந்த விவரங்­க­ளைத் தெரி­வித்­தன.

ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் மாறாமல் முந்­திய மாத அள­வுக்கே, அதா­வது 4% ஆகவே இருந்­தது.

புளூம்­பர்க் நிறு­வ­னம், பொரு­ளியல் வல்­லு­நர்­க­ளின் பண­வீக்கக் கணிப்­பு­கள் பற்றி தகவல் வெளி­யிட்டு இருந்­தது. அதில் அவர்­கள் எதிர்­பார்த்த அள­வை­விட பண­வீக்கம் குறை­வா­கவே உள்­ளது.

அந்த வல்­லு­நர்­கள் மூலா­தார பண­வீக்­கம் 2.5% ஆக இருக்­கும். ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 4.2% ஆக இருக்­கும் என்று கணித்து இருந்­தார்­கள்.

இத­னி­டையே, பண­வீக்க நிலவரம் பற்றி விளக்­கம் அளித்த அமைச்­சும் ஆணை­ய­மும், அண்மை­யில் உலக அள­வில் பண­வீக்­கம் மேலும் அதி­க­ரித்­த­தைச் சுட்­டிக்­காட்­டின. கொஞ்ச காலத்­திற்கு அது அதி­க­மா­கவே இருக்­கும்.

பிறகு இந்த ஆண்­டின் பிற்­பாதி­யில் பண­வீக்­கம் குறை­யத் தொடங்கும் என்று அந்த அமைப்பு­கள் தெரிவித்­துள்­ளன. கொஞ்ச காலத்­திற்குக் கச்சா எண்­ணெய் விலை ஏற்­ற­மா­கவே இருக்­கும்.

உலக போக்குவரத்­துப் பிரச்­சினை­களும் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய வர்த்­தக பங்­காளி நாடு­களில் தொழிலாளர் பற்­றாக்­கு­றை­யும் தொடர்ந்து இருந்து வரும் என்று அவை தெரி­வித்­துள்­ளன.

பொருள், சேவை விநி­யோகத்தில் உலக அள­வில் நில­வும் இடையூறு­கள் இந்த ஆண்­டில் இரண்­டா­வது பாதி­யில் அக­லும் வாய்ப்பு இருக்­கிறது என்று அவை கூறின.

இத­னால் உலக நில­வ­ரங்­கள் கார­ண­மாக பண­வீக்­கத்­தில் ஏற்படக்­கூ­டிய தாக்­கம் மெது­வாக இருக்­கும் என்றும் அவை குறிப் பிட்டு இருக்கின்றன.

அதே வேளை­யில், தொற்று கார­ண­மாக அல்­லது வட்­டார, உலக உற­வு­கள் கார­ண­மாக ஏதே­னும் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டும்­ பட்­சத்­தில் பணவீக்­கம் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் உண்டு என்று அவை தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!