புயலால் சேதம் ஏற்பட்டதையடுத்து பொங்கோல் குடியிருப்புப்பேட்டை மரங்கள் சோதனை

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஞாயிற்­றுக்­கிழமை இடி­யு­டன் கூடிய மழை பெய்­த­தில் பொங்­கோ­லில் பல மரங்­கள் சேத­ம­டைந்­தன.

அதைத் தொடர்ந்து, பொங்­கோல் ஆர்­கா­டியா குடி­யி­ருப்­புப் பேட்­டை­யின் அனைத்து மரங்­களும் சோதிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

பாசிர் ரிஸ்-பொங்­கோல் நகர மன்­றம் ஸ்ட்­ரெ­ய்ட்ஸ் டைம்­ஸுக்கு எழு­திய கடி­தத்­தில் அவ்­வாறு குறிப்­பிட்­டது.

ஆண்­டுக்கு இரண்டு முறை மரங்­க­ளின் கிளை­கள் வெட்­டப்­படு­வ­து­டன் வழக்­க­மான சோத­னை­களை நடத்­து­வ­தா­க­வும் அண்­மை­யில் இந்த மாதத் தொடக்­கத்­தில் அத்­த­கைய சோதனை இடம்­பெற்­ற­தா­க­வும் நகர மன்­றம் கூறி­யது.

இருப்­பி­னும், குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு மறு­உ­று­திப்­ப­டுத்­தும் நோக்­கில், மேலும் ஒரு மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் இன்­னும் ஒரு வாரத்­திற்­குள் அது முடி­வ­டை­யும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அண்­மை­யில், சுமார் நான்கு மாடி உய­ரம் கொண்ட மரம் ஒன்று, காரின் மீது விழுந்­த­தில் அதன் ஓட்­டு­நர் வாக­னத்­திற்­குள் சிக்­கிக்­கொண்­டார்.

சம்­ப­வத்­தில் காரின் முன்­பக்­கக் கண்­ணா­டி­யும் சன்­ன­லும் சிதைந்­தன. மரக் கிளை­கள் காருக்­குள் துளை­யிட்­டுப் புகுந்­தன.

ஓட்­டு­நர் அதிர்ஷ்­ட­வ­ச­மா­கத் தப்­பி­னார். பாதிக்­கப்­பட்ட ஆடவரைக் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர், பத்து நிமிட முயற்­சி­யில் மீட்­ட­னர்.

அந்த ஆட­வ­ருக்கு உத­வி­வ­ரு­வ­தாக நகர மன்­றம் தெரி­வித்­தது.

அந்­தக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யின் வேறு சில மரங்­களும் ஞாயிற்­றுக்­கி­ழமை மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. விளை­யாட்டுத்திட­லுக்கு அருகே இருக்கும் மற்­றொரு மரம் பன்­னோக்கு மண்­ட­பத்­தின் மீது விழுந்­த­தா­கக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கூறி­னர்.

அண்­மையச் சோத­னை­யின் போது, அங்­குள்ள மரங்­கள் அனைத்­தும் நல்ல நிலையில் இருப்­ப­தாக நிபு­ணர்­கள் சான்­ற­ளித்­தி­ருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!