தங்ளின் கடைத்தொகுதி $868 மில்லியனுக்கு விற்பனை

ஆர்ச்­சர்ட் சாலை­யின் ஆகப் பழைய சில்­லறை விற்­ப­னைத் தலங்­க­ளின் ஒன்­றான தங்­ளின் கடைத்தொகு­தியை, ராயல் கோல்டன் ஈகிள் நிறு­வ­னம் $868 மில்­லி­யன் விலைக்கு வாங்­கி­உள்ளது. எதிர்­பார்க்­கப்­பட்­டதைவிட இது 10% அதி­க­ தொகையாகும்.

முன்­ன­தாக $828மில்­லி­யன் தொடக்க விலைக்கு அதனை விற்க முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது.

ராயல் கோல்­டன் ஈகிள் நிறு வனம் அதை­விட 40 மில்­லி­யன் வெள்ளி அதி­கம் கொடுத்து இடத்­தைக் கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

313,000 சதுர அடிக்­கும் அதி­க­மான பரப்­ப­ளவு கொண்ட தங்­ளின் கடைத் தொகு­தி­யில் மொத்­தம் 364 கடை­கள் உள்­ளன.

12 மாடி­களும், இரண்டு நிலத்­தடித் தளங்­களும், இணைப்­பாக எட்டு மாடி கார் நிறுத்­து­மி­ட­மும் அதில் உண்டு.

தங்­ளின் கடைத்தொகுதி, வில்­லங்­கம் இல்­லாத வர்த்­தக இடம் என்­பது அதன் சிறப்­பம்­சம்.

அத­னால் அந்த இடத்தை வாங்கு­வ­தற்­குக் கடு­மை­யான போட்டி இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யச் செல்­வந்­த­ரான சுகான்டோ டனோட்­டோ­விற்­குச் சொந்­த­மான பசி­ஃபிக் ஈகிள் சொத்­துச் சந்தை நிறு­வ­னம், ஏற்­கெ­னவே கிரேக் சாலை­யில் உள்ள சைனா­ட­வுன் பிளாஸா கட்­ட­டத்தை வாங்கி அங்கு சொகுசு ஹோட்­டல் ஒன்­றைக் கட்­டி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!