கியூஆர் குறியீடு மோசடிகள்: தவிர்க்க உதவும் தகவல்கள்

சிங்­கப்­பூ­ரில் புதிய வகை மோசடி தலை­தூக்கி இருக்­கிறது.

குறுஞ்­செய்தி மூலம் அனுப்­பப்­படும் சிங்­கப்­பூர் கியூ­ஆர் குறி­யீடு­களைத் தங்­கள் சிங்­பாஸ் செயலி மூலம் பயன்படுத்­தும்­படி செய்து மக்­களை மோச­டிக்­கா­ரர்­கள் தங்கள் வலை­யில் சிக்க வைக்­கி­றார்­கள், ஏமாற்றுகிறார்கள்.

அப்­படி செய்­வ­தன் மூலம் அப்­பா­வி­கள் பெய­ரில் புதிய நிறு­வனத்தைப் பதிந்து அல்­லது புதிய கைபேசி எண்­களை வாங்கி அல்லது புதிய வங்கிக் கணக்­கு­களைத் திறந்து மோச­டிக்­கா­ரர்­கள் கைவரிசைக் காட்டுகிறார்கள்.

அந்­தப் பதி­வு­கள் சட்­ட­வி­ரோ­த­மான நோக்­கங்­க­ளுக்­காக பயன்­படுத்­தப்­ப­ட­லாம் என்று காவல் துறை எச்­ச­ரித்­துள்­ளது.

குறுஞ்செய்தி மூல­மாக, வாட்ஸ்­அப் மூல­மாக அனுப்­பப்படும் கியூ­ஆர் குறி­யீட்­டைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என்­றும் அவற்­று­டன் இணைந்­தி­ருக்­கும் இணைப்­பு­களைப் பயன்­படுத்த வேண்டாம் என்­றும் காவல்­துறை பொதுமக்களை அறி­வு­றுத்தி இருக்­கிறது.

பரி­வர்த்­த­னை­க­ளின்­போது அல்லது கடை­களில் பணம் செலுத் தும் முகப்­பு­களில் கியூ­ஆர் குறி­யீட்டை பயன்­படுத்­தும்­போது அது தானா­கவே படித்­துக்­கொள்­ளும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கியூ­ஆர் குறி­யீடு மோச­டிப் பேர்­வழிகள் முத­லில் பணம் கிடைக்­கும் என்று உறுதி கொடுப்­பார்­கள்.

கியூ­ஆர் குறி­யீட்­டைப் பயன்­படுத்­தச் சொல்­வார்­கள். பிறகு அங்­கீகா­ரம் இல்­லா­மல் பரி­வர்த்­த­னை­களில் ஈடு­ப­டு­வார்­கள்.

அந்தப் பரி­வர்த்­த­னை­கள் பற்றி கைபே­சி­யில் செய்தி வந்த பிற­கு­தான் அப்­பா­வி­கள் தாங்­கள் ஏமாற்­றப்­பட்டுவிட்­டதை உணர்­வார்­கள்.

ஆகையால், மக்கள் மிகவும் எச்சரிக்கையுன் விழிப்புடன் இருந்து கொள்ளவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!