சக ஊழியரின் விரலைக் கடித்தவருக்குச் சிறை

ஒரு தக­றாரின்­போது சக ஊழி­யரின் விர­லைக் கடித்த கட்­டு­மான ஊழி­யர் லோகன் கோவிந்­த­ராஜுக்கு 10 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

42 வயது முத்து செல்­வ­னின் விர­லின் ஒரு பகு­தி­யைத் தற்­போது 31 வய­தா­கும் லோகன் கடித்­திருக்­கி­றார். சம்­பவ இடத்­தில் திரு முத்து­வின் விரல் பாகம் காணப்­பட்­டது. ஆனால் மருத்­து­வர்­க­ளால் அதை மறு­ப­டி­யும் ஒட்­ட­வைக்­க­முடி­ய­வில்லை.

இருவரும் வசித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதியில் இருந்த மற்ற ஆண்­க­ளு­டன் திரு முத்து பாலி­யல் உறவு வைத்­துக்­கொண்­ட­தா­க லோகன் தவ­றா­கக் கூறி­யி­ருக்­கிறார். அதைத் தொடர்ந்து வந்த தக­றா­ரில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. இரு­வ­ரும் இந்­தி­யா­வைச் சேர்ந்த ஊழி­யர்­கள்.

இச்­சம்­ப­வம் 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் ஆறாம் தேதி மாலை நான்­கறை மணிக்கு நிகழ்ந்­தது. திரு முத்து, லோகன், மற்­றொரு வெளி­நாட்டு ஊழி­யர் மூவ­ரும் லாரி ஒன்­றில் மது அருந்­தி­ய­படி பாடல்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர். கிராஞ்சி கிரெ­சண்ட் பகு­தி­யில் இருக்­கும் அவர்­கள் வசித்த தங்­கு­வி­டு­திக்கு அருகே லாரி நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

மது­போதை அதி­க­மான பிறகு லோகன், திரு முத்து மற்ற ஊழி­யர்­க­ளு­டன் பாலி­யல் உறவு வைத்­தி­ருந்­த­தா­கக் கூறி­யி­ருக்­கி­றார். பொய் சொல்­வதை நிறுத்­தி­விட்டு அவ்­வி­டத்­திலிருந்து செல்­லு­மாறு திரு முத்து லோக­னைக் கேட்­டுக்­கொண்டார். அதற்­குப் பிறகு ஏற்­பட்ட தக­றாரில் லோகன் திரு முத்­து­வின் விர­லில் ஒரு பகு­தி­யைக் கடித்­தார்.

இச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­போது லோகன் குறைந்­தது மூன்று குவ­ளை­கள் மது­பா­னம் அருந்­தி­யி­ருந்­ததா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

வேண்­டு­மென்றே ஒரு­வரை மோச­மா­கக் காயப்­ப­டுத்­தி­ய­தா­கத் தன் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்றச்­சாட்டை லோகன் ஒப்­புக்­கொண்­டார்.

இந்­தக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டால் குற்றவாளிக்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்­டுச் சிறைத் தண்­டனை­யும் அப­ரா­தம் அல்­லது பிரம்­படி­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!