1,636 அட்டைப்பெட்டிகளில் கள்ள சிகரெட்; இருவர் கைது

சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை அதி­காரி­கள் சீனா­வைச் சேர்ந்த இரண்டு ஆட­வர்­க­ளைக் கைது­செய்து இருக்­கி­றார்­கள்.

தீர்வை செலுத்­தப்­ப­டாத 1,600க்கும் மேற்­பட்ட அட்­டைப் பெட்டி­களில் இரு­ந்த கள்ள சிகரெட்­டு­களை அவர்­கள் கைப்­பற்றி இருக்­கி­றார்­கள்.

மார்­சி­லிங் கிர­செண்ட் கன­ரக வாக­னப்பேட்­டை­யில் சிங்­கப்­பூர் டிரக் வாக­னத்­தில் இருந்து சிங்­கப்­பூ­ரில் பதி­வான வேன் வாக­னத்­திற்கு கறுப்பு நிற பைகளில் அடைக்­கப்­பட்டு இருந்த சரக்­கு­களை இரண்டு ஆட­வர்­கள் மாற்றி ஏற்­றிக்கொண்டு இருந்­ததை அதி­காரிகள் பார்த்­த­னர்.

அதி­கா­ரி­கள் வாக­னத்­தைச் சோத­னை­யிட்­ட­போது 1,636 அட்டைப் பெட்­டி­களில் கள்ள சிக­ரெட்­டு­கள் இருந்­ததைக் கண்­ட­னர். 80 டப்பி சிக­ரெட்­டு­களும் பிடி­பட்டன.

அந்த ஆட­வர்­களில் ஒரு­வ­ரின் வீட்­டில் மேலும் ஒர் அட்­டைப்­பெட்டி­யில் கள்ள சிக­ரெட்­டு­கள் இருந்­தன. ஆறு டப்பி சிக­ரெட்டு­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

இந்தச் சட்­ட­வி­ரோத செய­லில் சம்­பந்­தப்­பட்ட வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

கைப்­பற்­றப்­பட்ட கள்ள சிக­ரெட்­டுக்­குச் செலுத்த வேண்­டிய தீர்வை $140,390 ஆகும். ஜிஎஸ்டி வரி $11,170. பிடி­பட்ட இரண்டு பேருக்­கும் எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் சுங்­கத்­துறை நேற்று தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!