நெல் பயிரிடும் தொடக்கப்பள்ளி மாணவர்கள்; உணவு விரயம், மீள்திறன் பற்றியும் கற்கிறார்கள்

யு நெங் தொடக்­கப்­பள்ளி ஐந்­தாம் வகுப்பு மாண­வர்­கள் ஏறத்­தாழ 200 பேருக்கு நெற்­ப­யிர் விவ­சா­யம் பற்றி கற்­றுக்­கொ­டுக்­கிறது.

சுற்­றுப்­பு­றம் பற்­றி­யும் உணவு விர­ய­மா­வதைத் தடுப்­பது குறித்­தும் மாண­வர்­க­ளுக்­குப் போதிக்­கும் திட்­டத்­தின் பகு­தி­யாக மாண­வர்­கள் நெற்­ப­யிரை பயி­ரிடு­கி­றார்­கள்.

வகுப்­ப­றை­களில் விதை விதைத்து, பிறகு நாற்­றைப் பிடுங்கி அறி­வி­யல் சோத­னைக் கூடத்­திற்கு வெளியே இருக்­கும் பெரும் பெரும் கலன்­களில் அவற்றை நட்டு மாண வர்கள் பயிர் செய்­கி­றார்­கள்.

அந்­தக் கலன்­க­ளின் மொத்த பரப்­ப­ளவு ஏறத்­தாழ 30 சதுர மீட்­ட­ராக இருக்­கிறது. சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்­களில் நெற்­பயிரை அறு­வடை செய்­யும்­போது ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் கிட்டத்­தட்ட ஒரு கிண்­ணம் அள­வுக்கு அரிசி கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உணவு விர­ய­மா­வ­தைப் பற்றி மாண­வர்­க­ளுக்குக் கற்று கொடுப்­பது இந்­தக் கல்வி திட்­டத்­தின் நோக்­க­மாக இருக்­கிறது. அதே வேளை­யில், இந்­தத் திட்­டம் மாண­வர்­க­ளின் கல்­விப் பாடங்­களில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு இருப்­ப­தாக அந்­தப் பள்­ளிக்­கூ­டத்­தின் துணை முதல்­வர் டே-லீ லி தெங் கூறினார்.

இந்­தக் கல்­வித் திட்­டம் மீள்திறன் போன்ற நன்­னெ­றி­களை மாண­வர்­கள் கற்­றுக்­கொள்ள உதவு­கிறது என்று அறி­வி­யல் துறை தலை­வி தேவி வாட்டி கூறி­னார்.

சுமார் இரண்டு வாரங்­க­ளுக்கு முன் கன­மழை கார­ண­மாக நாற்று­கள் மூழ்கி மடிந்­து­விட்­டன.

ஆனால் விவ­சா­யத்­தில் இப்­படி நிகழ்­வ­தெல்­லாம் வழக்­க­மா­ன­வை­தான் என்று ஏற்­றுக்­கொண்டு மனம் உடை­யா­மல் மாண­வர்­கள் மீண்­டும் நெற்­ப­யிரை வளர்த்­த­னர் என்று திரு­வாட்டி டாய் வெய் லிங் என்ற மாண­வர் சேர்க்கை அதி­காரி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!