இரு பிடிஓ திட்டங்கள் நிறைவு

நிதிப் பிரச்­சி­னை­யால் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பிடிஓ எனப்­படும் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் வீட்­டுத் திட்­டங்­கள் இரண்டு நிறை­வ­டைந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கிரேட்­எர்த் கார்ப்­ப­ரே­ஷன், கிரேட்­எர்த் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் என்­னும் கட்­டு­மா­னக் குத்­த­கை­ நிறுவ னத்திடம் அந்தத் திட்­டங்­கள் இருந்­தன. ஆனால் நிதிப் பிரச்­சினை கார­ண­மாக அத்­திட்­டங்­க­ளைக் கைவி­டு­வ­தாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவை அறி­வித்­தன. செஞ்சா வட்­டா­ரத்­தில் உள்ள செஞ்ஜா ரிட்­ஜஸ், செஞ்ஜா ஹைட்ஸ் ஆகிய இரு திட்­டங்­க­ளும் தற்­போது வெற்­றி­க­ர­மாக முடிக்­கப்­பட்டு உள்­ள­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தெரி­வித்து உள்­ளது.

அத­னைத் தொடர்ந்து மூன்று புளோக்­கு­க­ளைச் சேர்ந்த 782 வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­க­ளது புதிய வீட்­டுக்­கான சாவி­யைப் பெறத் தொடங்­கி­யுள்­ள­னர்.

தாம­த­ம­டைந்த மேலும் மூன்று பிடிஓ திட்­டங்­கள் நல்­லமு­றை யில் ெசயல்­பட்டு வரு­வ­தா­க­வும் திருத்­தப்­பட்ட கால அவ­கா­சப்­படி அவற்றை முடிப்­ப­தற்­கான பணி­கள் நடை­பெ­று­வ­தா­க­வும் கழ­கம் நேற்று கூறி­யது.

ஸ்கை விஸ்தா @ புக்­கிட் பாத்­தோக், மார்­சி­லிங் குரோவ் மற்­றும் வெஸ்ட் கோஸ்ட் பார்க்­வியூ ஆகி­யன அந்த மூன்று திட்­டங்­கள்.

இந்த ஐந்து பிடிஓ திட்­டங்­களும் மூன்று மாதங்­கள் வரை தாம­தத்தை எதிர்­நோக்­கின. அர­சாங்க உதவி இருந்­தும் 70 மில்­லி­யன் கட­னில் சிக்­கி­ய­தாக கிரேட்­எர்த் நிறு­வ­னம் அறி­வித்த பின்­னர் இத்­திட்­டங்­கள் மாற்­றுக் குத்­த­கை­யா­ளர்­கள் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

செஞ்ஜா ரிட்­ஜஸ் திட்­டத்தை டீம்­பில்ட் எஞ்­ஜி­னி­ய­ரிங் அண்ட் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் நிறு­வ­னம் நிறை­வேற்­றி­யது. இதில் ஒரே ஒரு புளோக் இடம்­பெற்­றுள்­ளது. அந்த புளோக்­கில் 230 வீடு­கள் கட்­டப்­பட்டு உள்­ளன. இத்­திட்­டம் கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் முடிக்­கப்­பட வேண்­டி­யது.

அதே­போல மற்­றொரு திட்­ட­மான செஞ்ஜா ஹைட்ஸை நியூ­கான் பில்­டர்ஸ் நிறை­வேற்றி உள்­ளது. இத்­திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்ள இரு புளோக்­கு­களில் 552 வீடு­கள் கட்­டப்­பட்­டுள்­ளன.

இத்­திட்­டத்தை நிறை­வேற்ற கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்டு மற்­றும் இவ்­வாண்­டின் முதல் காலாண்டு என நிர்­ண­யம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் பர­வி­ய­தன் கார­ண­மாக கட்­டு­மா­னத் துறை மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டது. அத­னால் தாம­த­ம­டைந்த பிடிஓ திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான பணி­க­ளுக்கு வீவக கைகொ­டுத்து வரு­கிறது.

நிதிப் பிரச்சினையிலிருந்து விடுபட்டதால் வீட்டு உரிமையாளர்களிடம் சாவி ஒப்படைப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!