செய்திக்கொத்து

$726,000 மதிப்­புள்ள 9 கிலோ போதைப்­பொ­ருள் பறி­மு­தல்

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) அதி­கா­ரி­கள் வெள்­ளிக்­கி­ழமை நடத்­திய சோதனை நட­வ­டிக்­கை­யில் சுமார் 9 கிலோ­கி­ராம் எடை­யுள்ள போதைப்­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இது தொடர்­பாக மூன்று ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொருள்­க­ளின் மதிப்பு $726,000 என கணக்­கி­டப்­பட்­டுள்­ள­தாக நேற்று பிற்­ப­க­லில் சிஎன்பி கூறி­யது.

போதைப்­பொ­ருள்­களில் 3.795 கிலோ­கி­ராம் கஞ்சா, 2.161 கிலோ­கி­ராம் ஐஸ், 474 கிராம் ஹெரா­யின், 220 கிராம் கொக்­கைன், 167 கிராம் கெட்­டா­மைன், 774 கிராம் எக்­டஸி மாத்­தி­ரை­கள், 4,887 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் ஆகி­யன அடங்­கும். பிடி­பட்­டுள்ள கஞ்­சா­வின் அளவு சுமார் 540 போதைப் புழங்­கி­க­ளுக்கு ஒரு வாரத்­திற்கு விநி­யோ­கிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என சிஎன்பி கூறி­யுள்­ளது. அப்­பர் சிராங்­கூன் ரோட்­டில் உள்ள தனி­யார் வீடு ஒன்­றில் வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­க­லில் அதி­கா­ரி­கள் திடீர் சோதனை நடத்­தி­ய­போது போதைப்­பொ­ருள் தொடர்­பாக 21, 28, மற்­றும் 31 வய­து­டைய மூன்று ஆட­வர்­கள் சிக்­கி­னர்.

கூடு­தல்­நே­ரம் செயல்­பட்ட பல­துறை மருந்­த­கங்­களில் கூட்­டமில்லை

சிங்­கப்­பூ­ரில் சனிக்­கி­ழமை பிற்­ப­க­லில், கூடு­தல் நேரம் திறந்­தி­ருந்த பல­துறை மருந்­த­கங்­கள் சில­வற்­றில் அதி­கக் கூட்­ட­மில்லை; இருப்­பி­னும் தொடர்ந்து பல நோயா­ளி­கள் பொது மருத்­து­வர்­க­ளைக் காணச் சென்­ற­னர்.

பல­துறை மருந்­த­கங்­கள் வார இறுதி நாள்­களில் கூடு­தல் நேரம் திறந்­தி­ருக்­கும் என்­பது தங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று அவர்­கள் கூறி­னர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் வெகு­வாக அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து, நிலை­மை­யைச் சமா­ளிக்க ஆறு பல­துறை மருந்­த­கங்­கள் கூடு­தல் நேரம் திறக்­கப்­பட்­டுள்­ளன.

புக்­கிட் பாஞ்­சாங், யூனூஸ், காலாங், பய­னி­யர், பொங்­கோல், உட்­லண்ட்ஸ் ஆகிய பல­துறை மருந்­த­கங்­கள் அவை. பிப்­ர­வரி 26 முதல், அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு, சனிக்­கி­ழமை பிற்­ப­கல் வேளை­க­ளி­லும், ஞாயிற்­றுக்­கி­ழமை காலை நேரங்­க­ளி­லும் நோயா­ளி­கள் அவற்றை நாட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

புதிய அறி­விப்­பின் கீழ், சனிக்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை­யி­லும், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் காலை 9 மணி­யில் இருந்து நண்­ப­கல் வரை­யி­லும் அந்த ஆறு பல­துறை மருந்­த­கங்­களும் திறந்­தி­ருக்­கும்.

இருப்­பி­னும், கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட்ட நோயா­ளி­க­ளுக்­கும், தீவிர சுவாச நோய்க்­கான அறி­கு­றி­கள் உடை­யோ­ருக்­கும் மட்­டுமே அவை சிகிச்சை அளிக்­கும். பிப்­ர­வரி மாத மத்­தி­யில் இருந்து அன்­றா­டக் கிரு­மித்­தொற்­றுச்

சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை பத்­தா­யி­ரத்­துக்­கும் மேல் பதி­வாகி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!