தமிழ்மொழியை நேசித்ததால் தேர்ச்சி சிகரத்தை நோக்கிய லட்சியங்கள் தோற்பதில்லை

மாணவப் பருவத்தில் ஒருவருக்கு அதிக அழுத்தத்தைத் தரக்கூடியவை தேர்வுகள். சிலருக்கு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்ணயிப்பதாக அத்தேர்வுகள் அமையலாம்.

அண்மையில் மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட

இந்த அறுவரும், தங்களின் லட்சியப் பாதையில் குறுக்கிட்ட சவால்களையும் அவற்றை எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

தமி­ழா­சி­ரி­ய­ரான தம் தாயாரே தனக்கு வழி­காட்டி என்­கி­றார் அடைக்­கப்­பன் வள்­ளி­யம்மை, 18. ஆனால் ஒரு கட்­டத்­தில் தமிழ் விருப்­பப் பாடத்­திட்­டத்­தில் சேர, தான் தயங்­கி­ய­தா­கக் கூறி­னார். இருப்­பி­னும், தமிழ்­மொழி மீதுள்ள ஆர்­வத்­து­டன் உழைத்­த­தால் தனது மேல்­நி­லைத் தேர்­வில் தமிழ்ப் பாடத்­தில் அவர் உச்­சத் தேர்ச்சி பெற்­றார்.

ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் தமிழ் இலக்­கி­யம் பயில வேண்­டும் என்­ற­தும் தொடக்­கத்­தில் பய­மாக இருந்­தது. தாயா­ரின் ஊக்­கு­விப்பு, தமிழ் ஆசி­ரி­யர் திரு வீர­முத்து கணே­சன் தந்த உற்­சா­கம் இரண்­டும் வள்­ளி­யம்­மைக்கு துணை­யாக இருந்­தன.

தேர்வு எழு­தும்­போது நேர நிர்­வா­கத்­தில் கவ­னம் செலுத்­தப் பயிற்சி செய்த வள்­ளி­யம்மை, படிப்­ப­டி­யாக தம் மதிப்­பெண்­களில் முன்­னேற்­றத்­தைக் கண்­டார். மொழித்­தி­றன் மேம்­பட, மனப்­பா­டம் செய்­தல் முக்­கி­யம் என்­றா­லும் படித்­த­தைப் புரிந்­து­கொண்டு பயன்­ப­டுத்­து­வது அதை­விட முக்­கி­யம் என்­பதை வள்­ளி­யம்மை காலப்­போக்­கில் உணர்ந்­தார்.

கர்­நா­டக வாய்ப்­பாட்டு இசை­யைச் சிறு வயது முதல் கற்­றுக்­கொள்­ளும் வள்­ளி­யம்மை, தமிழ் விருப்­பப்­பா­டத் திட்­டத்­தின்­போது அந்­தப் பாட்­டுத் திற­னை­யும் பயன்­ப­டுத்­தி­னா­ராம்.

இலக்­கிய நூல்­க­ளைக் கற்­ப­தற்கு இசை­யும் நடிப்­பும் வள்­ளி­யம்­மைக்­குப் பய­னுள்ள உத்­தி­க­ளாக அமைந்­தன.

மாண­வர்­க­ளின் கன­வு­களை நன­வாக்­கும் தமிழ் ஆசி­ரி­ய­ராக எதிர்­கா­லத்­தில் பணி­யாற்ற விரும்­பு­கி­றார் வள்­ளி­யம்மை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!