உறுதியுடன் செயல்பட்டால் வெற்றியே

தொடர்ச்­சி­யாக தூக்­க­மில்­லாத இர­வு­க­ளால் ஹேனா­வின் மன உளைச்­சல் அதி­க­ரித்­தது. தேர்வு நேரம் நெருங்­கும்­போது நம்­பிக்கை குலை­யும் நிலைக்கு ஆளா­க­வி­ருந்­தார் அவர்.

"இர­வெல்­லாம் கண்­வி­ழித்­துப் படித்­த­போ­தும் சில சம­யம் எனக்­குப் பாடங்­கள் புரி­ய­வில்லை. இறு­தி­யாண்­டுத் தேர்­வி­லும் நான் சிறப்­பா­கச் செய்­யா­தது அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால், அந்­நே­ரத்­தில் என் பெற்­றோர் என்­மீது அன்பு மட்­டுமே காட்­டி­னர்," என்­றார் இனோயா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற 19 வயது ஹேனா கேர­லின் சாலொ­மோன்­ராஜ்.

கணினி, இயந்­திர இணைப்­பாட நட­வ­டிக்­கை­யின் நிர்­வா­கக் குழு­வில் பொறுப்­பேற்ற ஹேனா­வுக்கு, தனது பய­ணத்­தை­விட தன்னை நம்பி இருந்த மாண­வர்­க­ளின் வெற்­றி­தான் முக்­கி­ய­மா­கத் தெரிந்­த­தா­கக் கூறி­னார்.

போட்­டி­க­ளுக்­காக குழு உறுப்­பி­னர்­க­ளை­யும் மாண­வர்­க­ளை­யும் தயார் செய்­யும் பொறுப்பு அவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. பிற­ரின் எதிர்­பார்ப்­பு­க­ளைச் சமா­ளிப்­பது கடி­ன­மாக இருந்­த­தாக ஹேனா பகிர்ந்­து­கொண்­டார்.

இறு­தி­யாண்­டுத் தேர்­வில் இயற்­பி­யல் பாடத்­தில் எதிர்­பார்த்த அள­வுக்­குத் தேர்ச்­சி­ய­டை­யாத நிலை­யில் பதற்­ற­ம­டைந்­தார் ஹேனா. உறு­தி­யு­டன் தொடர்ந்து நடை­போட்­டால் நிச்­ச­யம் சிறந்த மதிப்­பெண்­கள் கிட்­டும் என்று தன்­னு­டைய இயற்­பி­யல் ஆசி­ரி­யர் கூறிய அறி­வுரை அவர் மனத்­தைத் திட­மாக்­கி­யது.

கணி­னித் துறை­யில் பணி­யாற்ற விரும்­பும் ஹேனா, தற்­போது நிர­லாக்க மொழி­யைப் பயின்று வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!