ஆசிரியர் சொற்களே வழிகாட்டி

தொடக்­கக் கல்­லூரி வாழ்க்­கை­யில் பல பொறுப்­பு­களை ஸ்‌ருதி சுமக்­கத் தயா­ரா­னார். ஆனால் அவற்­றைச் சமா­ளிப்­பது அவ்­வ­ளவு எளி­தன்று என்­ப­தைக் காலப்­போக்­கில் உணர்ந்­தார்.

அறி­வி­யல் பாடத்­தில் அதிக ஆர்­வம் கொண்­டி­ருந்த ஸ்ருதி, நன்­யாங் தொழில்­நுட்­பக் கல்­லூரி ஏற்­பாடு செய்த நன்­யாங் ஆராய்ச்­சித் திட்­டத்­தில் இணைந்­தார். சூரிய மின்­க­லங்­க­ளுக்கு மாற்று வழி­க­ளைக் கண்­ட­றி­யும் ஆராய்ச்­சியை மேற்­கொண்ட அவ­ருக்கு, விரு­து­கள் கிடைத்­தன.

தொடக்­கக் கல்­லூ­ரிப் பய­ணத்­தில் தனக்கு ஏற்­பட்ட சிக்­கல்­க­ளைக் களைய உறு­து­ணை­யாக இருந்­த­வர் தன்­னு­டைய வகுப்­பா­சி­ரி­யர் என்­றார் ஸ்‌ருதி.

"பிற­ரின் செயல்­களை நாம் மாற்ற முடி­யாது. ஆனால் பதி­லுக்கு நாம் என்ன செய்­கி­றோம் என்­பதை மாற்­றிக்­கொள்ள முடி­யும் என்று அவர் சொன்­னது சவால்­களை எதிர்­கொள்­ளும் தெளிவை எனக்­குத் தந்­தது," என்­றார் ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் பயின்ற 18 வயது ஸ்ருதி முர­ளிக்­கி­ருஷ்ணா.

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த சிறு­வர்­க­ளுக்கு உத­வும் நோக்­கில் பல்­வேறு தொண்­டூ­ழி­யப் பணி­க­ளி­லும் ஸ்ருதி ஈடு­பட்­டுள்­ளார். சிண்டா தொண்­டூ­ழி­ய­ராக இருக்­கும் இவர், தன் பள்­ளி­யி­லும் தலை­மைத்­து­வப் பொறுப்­பு­க­ளு­டன் இதர நட­வ­டிக்­கை­க­ளைக் கவ­னிக்­க­வேண்­டி­யி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரின் 'ஸ்டெம்' துறை எனக் குறிப்­பி­டப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தப் பிரி­வு­க­ளுக்­குப் பங்­காற்ற வேண்­டும் என்ற லட்­சி­யத்­து­டன் இருக்­கி­றார் ஸ்ருதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!