தொடக்கக் கல்லூரி நாள்கள் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள்

ஆ. விஷ்ணு வர்­தினி

தொடக்­கக் கல்­லூரி வாழ்க்கை முழுக்க முழுக்க சுக­மான ஓர் அனு­ப­வம் என்று சொல்­லி­விட முடி­யாது. ஆனால், இனிய நினை­வ­லை­க­ளை­யும் புதிய திறன்­க­ளை­யும் அது அளிக்க வல்­லது என்­பதே உண்மை. தொடக்­கக் கல்­லூ­ரி­யில் சேர்ந்த முதல் ஆண்­டில் எவ்­வ­ளவோ முட்டி மோதி­னா­லும் கணி­தப் பாடத்­தில் சிறப்­பா­கச் செய்ய முடி­ய­வில்லை.

அந்­தச் சிர­மத்தை எதிர்­கொள்ள நான் எடுத்த பெரும் முயற்­சியே என்­னைப் பின்­னர் காப்­பாற்­றி­யது. முக்­கி­ய­மாக, என்­னு­டைய ஆசி­ரி­ய­ரி­டம் கேள்­வி­கள் கேட்­டும் நண்­பர்­க­ளின் உத­வியை நாடி­யும் என்­னால் தெளிவு பெற முடிந்­தது.

இந்­திய கலா­சார மன்­றத்­தி­லும் கவி­மாலை மாண­வர் அணி­யி­லும் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்ற எனக்கு, கொவிட்-19 சூழல் தந்த நெருக்­க­டி­க­ளைக் கடக்­கும் மனத் தைரி­யத்தை என் பெற்­றோர் அளித்­த­னர். இத்­தனை பொறுப்­பு­க­ளுக்கு இடையே தொடர்ந்து எனக்கு ஊக்­க­ம­ளித்த பெற்­றோ­ருக்கே நான் நன்றி சொல்ல வேண்­டும்.

ஆசி­ரி­யர்­களை நம்­பி­யி­ருக்­கா­மல் சுய­மா­கச் செயல்­படும் திற­னைத் தொடக்­கக் கல்­லூரி வாழ்க்கை தரும். குறு­கிய கால­கட்­டத்­தில் அறி­வார்ந்த முடி­வு­களை எடுக்­கும் திறனை வளர்த்­துக்­கொள்ள தொடக்­கக் கல்­லூரி நாள்­கள் எனக்கு உத­வின.

மேல்­நி­லைத் தேர்வு நெருங்­கும்­போது கற்­றதை மீண்­டும் மறு­பார்­வை­யி­டும் வேளை­யில் சலிப்­புத் தட்­டி­யது. நேரம் மெது­வா­கக் கடந்து போவ­தாக உணர்ந்­தேன். ஆனால், நண்­பர்­களும் சக மாண­வர்­களும் அந்­தச் சவால்­மிக்க கால­கட்­டத்­தில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உதவி, நலன் பேணி­யது என்னை நெகிழ வைத்­தது.

நான் எடுக்­கும் முடி­வு­க­ளுக்கு நானே பொறுப்பு என்­பதை என் தொடக்­கக் கல்லூ­ரிப் பய­ணம் உணர்த்­தி­யது.

அறி­மு­கம் இல்­லா­த­வர்­க­ளி­டம் சென்று பேசும் தைரி­யத்­தை­யும் நான் பெற்­றேன்.

தமிழ் முரசு நாளி­த­ழில் செய்­தி­யா­ள­ரா­கப் பயிற்சி பெற்று வரும் நான், தொடக்கக் கல்­லூ­ரி­யில் கற்­றுக்­கொண்ட திறன்­களைப் பயன்­ப­டுத்தி, பல்­வேறு சூழ்­நிலை­க­ளைச் சமா­ளிக்­கி­றேன்.

விளை­வு­கள் எது­வா­னா­லும் முயற்­சி­யைக் கைவி­டக்­கூ­டாது என்று தொடக்­கக் கல்­லூ­ரி­யில் நான் உணர்ந்­த­தைத் தற்­போது செயல்­ப­டுத்தி வரு­கி­றேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!