கவலைகளற்ற வாழ்க்கைமுறை பின்பற்றும் வழக்கறிஞர்

வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் திரு ஜெயராஜ் இந்திர ராஜ் அவர்களுக்கு 68 வயது நிரம்பியிருந்தாலும், தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளோரையும் சிரத்தையோடு பேணி, அவரை இன்னும் திடகாத்திரமாக வைத்துக்கொள்ளும் ஆரோக்கியமான பல பழக்கவழக்கங்களை மேற்கொண்டு இளமையுடன் திகழ்கிறார் அவர்.

திரு இந்திர ராஜின் நாளானது அனைத்து வாரநாள்களிலும் விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்குகிறது. அவரும் அவரது மனைவியும் காலையில் நீந்தச் சென்றுவிட்டு, பின்னர் தங்களது அலுவல்களைச் செய்யத் தொடங்குவர். 1989ஆம் ஆண்டிலிருந்தே கிட்டத்தட்ட தினமும் நீந்தும் பழக்கத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதனை தனக்கு அறிமுகப்படுத்தியது தனது மனைவி, திருமதி மேரி அங் லுவாங் சூ தான் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார். இளமையில் தனக்கு வந்த மூச்சுத்தடை நோயைக் கருதி நீச்சல் கற்றுக்கொண்ட இவர், தற்போது அதை உத்வேகமூட்டும் நல்ல வாழ்வியல் பழக்கமாகக் கொண்டுள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,100 மீட்டர் நீந்தி வருகின்றார் அவர்.

இளமையிலிருந்தே குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார், நான்கு சகோதரர்களில் மூன்றாவதாக விளங்கும் திரு இந்திர ராஜ்.

குடும்ப நலனே அவர் எடுத்தப் பல வேலைச்சார்ந்த முடிவுகளுக்குக் காரணமாய் இருந்தது. தற்போது அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துகொண்டு வரும் சட்ட நிறுவனமான ‘ஹாரோல்ட் சீட் ஆண்ட் இந்திர ராஜ்’, தனது கூட்டாளி ஹரோல்ட் சீட்டும் திரு இந்திர ராஜும் சேர்ந்து தொடங்கியதாகும். அதன் உருவாக்கத்திற்கு முன்னர் ஒரு சில சட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த திரு இந்திர ராஜ், அச்சமயத்தில் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க இயலாத அளவுக்கு வேலைப் பளு இருந்ததாக உணர்ந்தார். உறவுகளைப் பேணுவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற தனது தத்துவத்தின் அடிப்படையில், தனக்கேற்ற வேலைப்பளுவை மேற்கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுக்க முடிந்த வேலையிடத்தை உருவாக்கிக்கொண்டார்.

“1989ஆம் ஆண்டில் வேலைப்பளு காரணமாக எனக்கு மூச்சுத்தடை ஏற்பட்டது. அப்போது நான் பழகிக்கொண்ட நீச்சல் எனது வாழ்க்கையைப் பெரிதளவில் மாற்றியது.

உடற்பயிற்சி மேற்கொள்ளாத என்னுடையப் பல நண்பர்கள் அதிக மன உளைச்சலோடு காணப்படுவர். அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் எனது சுருக்கங்களற்ற சருமத்தையும் சோர்வற்ற நடத்தையையும் பற்றி வியந்து கேட்பர். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதை அவர்களுக்கு நான் பரிந்துரைப்பதுண்டு. மேலும், வழக்கறிஞர்களாகப் பணிபுரியும் எனது நண்பர்கள், தொடர்ந்து கடுமையாக உழைத்து உடலை வறுத்திக்கொண்டதைக் கண்டுள்ளேன். அவர்களுள், பக்கவாதம், புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு இளமையிலிருந்தே மிக வேதனையுற்றிருப்போரும் உள்ளனர். அத்தகைய வாழ்க்கைமுறையை நான் விரும்பவில்லை.” என்றார் திரு இந்திர ராஜ். தற்போது பராமரிப்பு இல்லத்தில் உள்ள 74 வயதான தனது அண்ணனைச் சென்று காணுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்கி வருகின்றார் அவர்.

தனது வழக்கறிஞர் பணியைத் தவிர்த்து, திரு இந்திர ராஜ் சமூகத்தில் தொண்டூழியம் செய்தும் வருகின்றார். செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையின் தொடக்கத்திலிருந்தே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அதன் உருவாக்கத்திலும் நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தார் திரு இந்திர ராஜ். மேலும், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பிலும் உறுப்பினராக இருந்து வந்துள்ளார் அவர். இத்தகைய தொண்டூழியப் பணிகளே தனக்கு அதிக மனநிறைவைத் தருவதாக அவர் உணர்கிறார்.

தனது மனைவியைச் சந்திக்கும் முன் தனது வாழ்வில் அவரது முதல் காதலாக இருந்தது இசைதான் என்று நகைத்தார் திரு இந்திர ராஜ். 1966ஆம் ஆண்டில் ஆங்கிலோ சீனப் பள்ளியின் இசைக் குழுவில் டிரம்பெட் எனும் ஊதுகொம்பினை அவர் வாசித்து வந்தார். பாடாங் திடலில் நடந்தேறிய முதல் தேசிய தின அணிவகுப்பிலும் திரு இந்திர ராஜ் வாசித்தார். தற்போது, அவர் வழக்கமாகச் செல்லும் வெஸ்லி மெதடிஸ்ட் தேவாலயத்தில் இயங்கும் வெஸ்லி சோலி டியோ கிளோரியா எனும் இசைக்குழுவில் தொடர்ந்து வாசித்து வருகின்றார். கொவிட்-19 சூழலில் காற்றிசைக் கருவிகளைத் தேவாலயத்தின் பொது நிகழ்வுகளில் வாசிக்க இயலாமல் போனாலும், தனிப்பட்ட முறையில் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்து வருகின்றார் அவர்.

“என்னை மிக உற்சாகமாக வைத்துக்கொள்வது இசைதான். படிப்பையும்விட எனக்கு இளமையிலிருந்தே இசையில் தான் அதிக விருப்பம் இருந்தது. இன்றுவரை ஊதுகொம்பு வாசிப்பதை விடாமல் தொடர்கிறேன்.” என்றார் திரு இந்திர ராஜ்.

இவ்வகையில் திரு இந்திர ராஜ் தனது ஆரோக்கியத்தையும் குடும்ப நலனையும் சமூக நலனையும் பேணுவதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார். தனது அலுவல்களை எல்லாம் தானே செய்துகொண்டு, மன உறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கும் திரு இந்திர ராஜ் தன்னைச் சுற்றியுள்ளோரையும் மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றார். ஒவ்வொரு நாளையும் முழுதாக அனுபவிப்பதோடு, அதை அதிகபட்ச அளவுக்கு இரசிக்கவேண்டும் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளார் திரு இந்திர ராஜ்.


வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டம்

உறுதியுடனும் கண்ணியத்துடனும் சிங்கப்பூரர்கள் மூப்படைவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இச்செயல்திட்டத்தைத் தொடங்கியது.

அக்குழு 2017ஆம் ஆண்டில் “இளமை உணர்வில் நான் எஸ்ஜி” எனும் திட்டத்தைத் தொடங்கி, செயல்திட்டத்தையும் துடிப்பான மூப்படைதலையும் ஊக்குவிக்க முனைந்தது.
மேல் விவரங்களுக்கு http://www.ifeelyoung.sg/ இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்கால, எதிர்கால மூத்தோருக்கு சேவையாற்ற, மேலும் பலதரப்பட்ட தேவைகளுக்கு உடனடியாக உதவவும் கொவிட்-19 சூழலால் புதிய செயல்பாட்டு சூழலையும் கற்றலையும் கொண்டு புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டமானது, பராமரிப்பு, பங்களிப்பு, இணைப்பு ஆகிய மூன்று கூறுகளை மையப்படுத்துவதாக அமைகிறது.

பராமரிப்பு எனும் கூறு, நடைப்பிணிகளைத் தவிர்க்கவும், மூத்தோரின் வாழ்வு நலனை மேம்படுத்தவும், பராமரிப்பு சேவைகள் மூலம் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி வாழவும் ஊக்குவிக்கும்.

பங்களிப்பு எனும் கூறு, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகளையும், கற்றல் அனுபவங்களையும், தொண்டூழியப் பணி ஈடுபாட்டையும் அதிகரிக்க முற்படும்.

கடைசியாக, இணைப்பு எனும் கூறு, ‘கம்பத்து உணர்வு’ போன்ற மூத்தோருடைய சமூகப் பிணைப்பையும், இளையத் தலைமுறையினருடனான உறவுகளையும் மின்னிலக்கத் தளங்களில் வலுப்படுத்துவதோடு அரவணைப்புடன் கட்டப்பட்ட சூழலில் மூப்படைவதற்கு ஆதரவளிக்கும்.

இந்தத் தகவலை வழங்குவது:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!