சட்டவிரோத தொகையை செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்களில் பாதிப் பேருக்கு தொடர்ந்து வேலை

கிட்­டத்­தட்ட 2,400 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அல்­லது தங்­கள் வேலையை உறு­திப்­ப­டுத்த முத­லா­ளி­கள் கேட்­கும் சட்­ட­வி­ரோத தொகை­யைச் செலுத்­தி­ய­வர்­களில் பாதிப் பேர் தொடர்ந்து இங்கு வேலை செய்து வரு­கின்­ற­னர். மற்­ற­வர்­கள் தங்­கள் நாடு திரும்ப முடிவு செய்­தார்­கள் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­தார்.

2016லிருந்து 2020 வரை மனி­த­வள அமைச்சு புல­னாய்வு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களில் இது பற்றி தெரிய வந்­தது. சுமார் 20 விழுக்­காட்­டி­னர் புதிய வேலை­யில் சேர்­கின்­ற­னர். அதே சம­யம் 30 விழுக்­காட்­டி­னர் சட்­ட­வி­ரோத தொகை தொடர்­பான சிக்­கல்­கள் தீர்க்­கப்­பட்ட பிற­கும் தங்­கள் முத­லா­ளி­க­ளுக்­காக தொடர்ந்து பணி­யாற்ற முடிவு செய்­கின்­ற­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கள் வேலையை உறு­திப்­ப­டுத்த முத­லா­ளி­கள் கேட்­கும் சட்­ட­வி­ரோத தொகை பொது­வாக $1,000லிருந்து $3,000 வரை இருக்­கும் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­ச­ரு­மான டாக்­டர் கோ விவ­ரித்­தார். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்து முத­லா­ளி­கள் பெறும் சட்­ட­வி­ரோத தொகை பற்றி நீ சூன் குழுத் தொகுதி உறுப்­பி­னர் கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், 2016க்கும் 2020க்கும் இடை­யில், மனி­த­வள அமைச்சு ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 102 முறை கேடான முத­லா­ளி­கள் மீது சட்­ட­வி­ரோத தொகையை வசூ­லித்­த­தற்­காக அம­லாக்க நட­வ­டிக்கை எடுத்­தது என்­றார்.

சரா­ச­ரி­யாக, ஒவ்­வொரு முத­லா­ளியாலும் சுமார் ஐந்து வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சட்­ட­வி­ரோத தொகை பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்­றும் டாக்­டர் கோ கூறி­னார்.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளி­டம் எந்­தக் கட்­ட­ண­மும் வசூ­லிக்­கக் கூடாது என்­ப­தில் உறு­தி­யாக உள்ள வேலை­வாய்ப்பு முக­வர் பங்­காளி களி­டம் அவர்­க­ளைப் பரிந்­து­ரைப்­ப­தன் மூலம் ஊழி­யர்­கள் இங்கு புதிய வேலை­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு அமைச்சு உத­வு­வதாக டாக்­டர் கோ கூறி­னார்.

"ஊழி­யர்­கள் தங்­க­ளி­டம் முத­லா­ளி­கள் சட்­ட­வி­ரோத தொகையை வசூ­லிப்­பது தொடர்­பில் புகா­ர­ளித்த பிற­கும், அவர்­கள் தொடர்ந்து வரு­மா­னம் ஈட்­டு­வ­தற்­காக இங்­கேயே தங்க முடி­யும் என்­பதை இது உறுதி செய்­கிறது," என்று அமைச்­சர் மேலும் சொன்­னார்.

சட்­ட­வி­ரோத தொகையை வசூ­லிப்­பது தொடர்­பி­லான முதலாளிகள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டால், பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளைத் திருப்பி அனுப்ப முத­லா­ளி­கள் அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள், ஊழி­யர்­களி­டம் வசூ­லித்த பணத்­தைத் திருப்­பித் தரப்படுவதை அமைச்சு உறுதிசெய்யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!