செய்திக்கொத்து

புதிய செல்வ வரி குறித்து எம்.பி.க்களின் மாறுபட்ட கருத்துகள்

கூடுதல் குடியிருப்பு சொத்து வரிகள், கார்களுக்கான கூடுதல் பதிவுக் கட்டணம் ஆகியவை அர்த்தமுள்ள சொத்து வரிகளைக் காட்டிலும் கண்துடைப்பு நடவடிக்கை களாகும் என்று செங்காங் குழுத் தொகுதியின் பாட்டாளிக் கட்சி எம்.பி. லூயிஸ் சுவா நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் கூறினார்.

அதை மறுத்துப் பேசிய வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்பினர் ஃபூ மீ ஹார், சொத்து தொடர்பான வரிகள் சிங்கப்பூரின் வருவாய்த் தளத்திற்கு பல ஆண்டு களாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன. மேலும் சொத்து வாங்குபவரின் கூடுதல் முத்திரைத் தீர்வை சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கையாக இருப்பதுடன் கூடுதலாக செல்வ வரியாகவும் மாறியுள்ளது என்றார்.

இந்த வரிகள் நடைமுறைப்படுத்தப்படும்போது ஆண்டுக்கு $600 மில்லியன் கூடுதல் வரி வருவாயை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிபுணத்துவ மதிப்பீடுகளை விட கணிசமாகக் குறைவு என்று திரு சுவா கூறினார்.

செல்வ வரிகளால் உயர்த்தப்பட்ட தொகை பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், சொத்து வாங்குபவரின் கூடுதல் முத்திரைத் தீர்வை போன்ற சொத்து தொடர்பான வரிகள், உண்மையில் சிங்கப்பூரின் வருவாய்த் தளத்திற்கு நல்ல பங்களிப்பை அளித்துள்ளன என்று திருமதி ஃபூ கூறினார்.

கடந்த ஆண்டு, முத்திரை வரி வசூல் $6.45 பில்லிய னாக அதிகரித்தது. இது முந்திய ஆண்டைவிட $2.55 பில்லியன் அதிகமாகும். அதாவது 66% உயர்வு.

நிலையற்ற உலகுக்கு மீள்திறன், வலிமை ஆகியவற்றில் முதலீடுகள் தேவை

கணிக்க முடியாத, நிலையற்ற உலகில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களுக்கு மத்தியில், சிங்கப்பூரின் தாக்குப் பிடிக்கும் தன்மையை உறுதிசெய்ய, நாம் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது என்று புக்கிட் பாத்தோக் தொகுதி உறுப்பினர் முரளி பிள்ளையும் அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் ஜெரால்ட் கியாமும் நேற்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது தெரிவித்தனர்.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, இருவரும் தங்கள் உரைகளைத் தொடங்கினர். "சிங்கப்பூர் வல்லரசுகளின் சூழ்ச்சிகளால் எப்போதுமே பாதிக்கப்படக்கூடியது. எந்த அச்சுறுத்தலுக்கு எதிராகவும் தொடர்ந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்," என்பதை திரு முரளி நினைவுபடுத்தினார்.

சிங்கப்பூர் அரசாங்கம் எந்தெந்த உத்திபூர்வத் துறை களில் உடனடி மற்றும் நீண்டகாலத்திற்கு மீள்திறன் கொண்ட உறுதியான ஆற்றல்களை உருவாக்க உத்தேசித்து உள்ளது என்ற கேள்விகள் எழும் என்றார் திரு முரளி. சிங்கப்பூரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நீண்டகால மாகச் சிந்திப்பது மசெக அரசாங்கத்தின் ஓர் அடையாள மாக உள்ளது. உயரும் கடல் மட்டத்தைச் சமாளிக்கத் தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டங்களை மேற்கோள் காட்டி, அடுத்த தொற்றுநோய்க்கு தயாராக இருக்க அறிவியல், சுகாதார உள்கட்டமைப்பில் திறன்களை வலுப்படுத்துவதை திரு முரளி சுட்டினார்.

இதற்கிடையே, பாட்டாளிக் கட்சியின் திரு கியாம், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் கோபமூட்டும் செயல்கள் "ஒரு பெரிய அண்டை நாட்டின் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட நாட்டின் இறை யாண்மையின் பலவீனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டு கிறது," என்று விவரித்தார்.

இந்தப் பின்னணியில், நாட்டின் தாக்குப்பிடிக்கும் தன்மை யைத் தொடர்ந்து கட்டியெழுப்புவது என்பது, குடும்பங்கள், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நிறுவனங்கள், பணியாளர்கள், சமூகம், அரசு என தாம் அடையாளம் கண்டுள்ள ஆகிய ஏழு தூண்களுக்குள் அணுக்கமான பங்காளித்துவம் இருக்க வேண்டும் என்றும் திரு கியாம் கூறினார்.

ஊழியரணியை உருமாற்றுவதற்கு $70 மி. மானியத்தை நிறுவனங்கள் பெறலாம்

தங்கள் ஊழியரணியை உருமாற்றுவதற்கு உறுதியான திட்டங்களை வகுத்துள்ள நிறுவனங்கள், உற்பத்தித்திறனை உயர்த்த, வேலைகளை மறுவடிவமைப்பு செய்ய, ஊழியர் களை மேம்படுத்த $70 மில்லியன் வரையிலான நிதியுதவி யைப் பெற முடியும் என்று என்டியுசியின் துணைத் தலைமைச் செயலாளர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

நிறுவனங்களில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த பணிக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கவும் மேலும் பரந்த அளவிலான துறைகளில் முத்தரப்பு கல்விக்கூடங்களை அமைக்கவும் தொழிலாளர் இயக்கம் திட்டமிட்டுள்ளது. நிறுவனப் பயிற்சிக் குழுக் களைக் கொண்ட வர்த்தகங்கள் தங்கள் உருமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்த இந்நிதி உதவும்.

2025ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 2,500 நிறுவனப் பயிற்சிக் குழுக்களை உருவாக்க என்டியுசி திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டுக்குள் அதன் இலக்கான 1,000லிருந்து இது அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!