வெளிநாட்டு இல்லப்பணிப்பெண்களுக்கான மருத்துவப் பரிசோதனை ஒத்திவைப்பு

சிங்கப்பூரில் பணி புரியும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் தங்கள் மருத்துவப் பரிசோதனையை ஒத்தி வைத்துக்கொள்ளுமாறு மனிதவள அமைச்சு அறிவிறுத்தியுள்ளது.


வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும் வொர்க் பெர்மிட்டில் இருக்கும் மற்ற பெண் ஊழியர்களும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போது அந்த பரிசோதனை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தற்போது கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சுகதாரத் துறை ஊழியர்கள் குறிப்பாக தனியார் மருந்தகங்களிலும் பலதுறை மருந்துகங்களிலும் உள்ள பொது மருத்துவர்கள் அதிக வேலைப் பளுவையும் நெருக்கடியையும் எதிர்நோக்குகின்றனர். இதனைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மனிதவள அமைச்சு புதன்கிழமை (மார்ச் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.


ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுட்டறிக்கை பெற்ற முதலாளிகள் தங்கள் பணிப்பெண்களை இன்னும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்றால் அவ்வாறு செய்ய அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுட்டறிக்கை பெறவிருக்கும் முதலாளிகளுக்குத் தங்கள் பணிப்பெண்களை அல்லது வொர்க் பெர்மிட்டில் இருக்கும் பெண் ஊழியர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவேண்டிய நேரத்தின் விவரங்கள் என்றும் தகவல் ஏப்ரல் இறுதிவாக்கில் தெரிவிக்கப்படும்.


எனினும் தங்கள் பணிப்பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தால் அவர்களை மருந்தகங்கள் திருப்பி அனுப்பி வைக்காது. அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படும். ஆனால் அவசியம் இல்லை எனில் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு தங்கள் பணிப்பெண்களை அனுப்பி வைக்கவேண்டாம் என்று அமைச்சு கோரியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!