பாட்டாளிக் கட்சிக்கு பதிலடி

வரு­மா­னத்­தின் அடித்­த­ளம் பரந்து, மீள்­தி­ற­னு­டன் தொடர்ந்து இருக்­கும் அதே வேளை­யில் நியா­ய­மா­க­வும் படிப்­ப­டி­யான முறை­யில் இருக்­க­வும் வரு­மா­னம், சொத்து, உப­யோ­கம் ஆகிய அம்­சங்­க­ளுக்­கான வரி­கள் கலந்­தி­ருக்­க­வேண்­டும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத் தின் முடி­வில் உரை­யாற்­றிய நிதி அமைச்­சர், வரு­மா­னத்தை அதி கரிக்க பாட்­டா­ளிக் கட்சி முன் வைக்­கும் பரிந்­து­ரை­களை மறுத்து பேசி­னார். பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) அதி­க­ரிக்­கா­மல் இருக்க மாற்று வழி­யாக பரிந்­து­ரைக்­கப்­பட்ட அத்­திட்­டங்­கள் நடை­மு­றைக்­குச் சாத்­தி­ய­மில்­லா­தவை என்­றார் அவர்.

"உப­யோக வரி­களை முற்­றி­லும் நிரா­க­ரித்து அனைத்து சுமை­யை­யும் வரு­மான, சொத்து வரி­களில் வைக்க முடி­யாது," என்று அவர் கூறி­னார்.

அனைத்து நாடு­களும் இந்த மூன்று அம்ச வரித் திட்­டத்­தைச் சார்ந்­து­தான் உள்­ளன என்று கூறிய அவர், பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, மேம்­பாட்டு அமைப்பு (ஓஇ­சிடி) நாடு களில் ஜிஎஸ்­டி­யைப் போன்ற மதிப்பு கூட்டு வரி விகி­தம் கூடு­த­லாக இருப்­ப­தா­க­வும் சொன்­னார்.

ஜிஎஸ்டி 7%லிருந்து 2024ஆம் ஆண்­டில் 9% ஏற்­றம் காணும்­போது அந்த வரி­வி­கித அதி­க­ரிப்­பால் ஆண்­டுக்கு $3.5 பில்­லி­யன் வரு மானம் கிடைக்­கும் என எதிர்பார்க்­கப்­ப­டு­கிறது.

தனிப்­பட்ட வரு­மான வரி விகி தத்தை அதி­க­ரிக்­கும் பரிந்­து­ரைக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், அதிக வரு­மா­னம் ஈட்­டு­வோ­ரின் வரி விகி­தத்தை 22%லிருந்து 42%க்கு ஏற்றி னால்­தான் அதே கூடு­தல் வரு­மா­னத்தை ஈட்­ட­மு­டி­யும் என்­றார்.

ஆண்­டுக்கு கணக்­கி­டப்­படும் வரு­மா­னம் $320,000 அல்­லது அதற்­கும் மேலாக இருப்­ப­வர்­க­ளுக்கு அந்த வரி விகித உயர்வு பொருந்­தும்.

இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யில் $500,000க்கும் ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்­கும் இடை­யில் கணக்­கி­டப்­படும் வரு மானத்­திற்கு 23% என்­றும் $1 மில்­லி­ய­னுக்­கும் மேலா­ன­வற்­றுக்கு 24% என்­றும் வரு­மான வரி உயர்வை அமைச்­சர் வோங் அறி­வித்­தி­ருந்­தார்.

இது­வரை $320,000க்கும் மேலான வரு­மா­னத்­திற்கு 22% என்­பது செயல்­பாட்­டில் உள்­ளது.

உல­க­ளா­விய வரி சட்ட மாற்­றங் களைக் கார­ணம் காட்டி ஜிஎஸ்டி உயர்­வைத் தவிர்க்க வேண்­டாம் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

தனிப்­பட்ட வரு­மான வரி­யைக் கணி­ச­மாக உயர்த்­து­வது ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தல்ல என்­றார் அவர்.

நாட்­டிற்­குக் கூடு­தல் வரு­வாய் ஈட்ட தனிப்­பட்ட வரு­மான வரியை மற்ற வரு­மா­னப் பிரி­வு­களில் உள்­ள­வர்­க­ளுக்கு அதி­க­ரிக்­கா­மல் அதிக வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்கு மட்­டுமே உயர்த்­து­வது சாத்­தி­ய­மல்ல என்­றும் அவர் கூறி­னார்.

மொத்த தனிப்­பட்ட வரு­மான வரி வரு­வா­யின் 80% தொகை, வரி­செ­லுத்­தும் முதல் 10% மக்­க­ளால் செலுத்­தப்­ப­டு­கிறது.

ஹாங்­காங்­கில் அதி­க­பட்ச வரு­மான வரி 17% என்­றும் ஆசிய நாடு­க­ளின் சரா­சரி அதி­க­பட்ச வரி 28% என்­றும் குறிப்­பிட்­டுப் பேசிய அவர், வரியை உயர்த்­திக்­கொண்டே போனால் சிங்­கப்­பூ­ரின் போட்­டித் தன்­மை­யை­யும் மக்­க­ளின் வேலை வாய்ப்­பை­யும் அது பாதிக்­கும் என்­றார்.

சொத்து வரி குறித்து பாட்­டா­ளிக் கட்­சி­யைச் சேர்ந்த செங்­காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லூயிஸ் சுவா கூறி­ய­தைச் சுட்டி பேசிய நிதி அமைச்­சர், இந்த ஆண்டு வரவு செல­வுத் திட்­டத்­தில் சொத்து வரி குறித்த அறி­விப்­பு­கள் குறிப்­பி­டத்­தக்­கவை என்­றும் படிப்­ப­டி­யான முறை­யில் அவை உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­ தார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் உரி­மை­யா­ளர் வசிக்­கும் அனைத்­திற்­கும், நக­ருக்கு வெளியே தனி­யார் கண்­டோ­மி­னிய வீடு­கள், குறைந்த மதிப்பு தரை­வீ­டு­களில் உள்­ளோ­ரில் மூன்­றில் இரு­வர் இந்த அறி­விப்­பால் பாதிப்­ப­டைய மாட்­டார்­கள் என்­றார் அமைச்­சர்.

இந்த மாற்­றங்­கள் அதிக மதிப்­பி­லான சொத்­து­க­ளுக்­கும் முத­லீட்டு சொத்­து­க­ளுக்­கும் பொருந்­தும்.

திரு சுவா­வும் சக உறுப்­பி­னர் ஜேமஸ் லிம்­மும் எழுப்­பிய மற்­றொரு பரிந்­து­ரை­யான மொத்த சொத்து வரி திட்­டத்­தை­யும் மறுத்து பேசி­னார் திரு வோங். அசை­யும் சொத்­து­கள் இட­மா­றிக்­கொண்டே இருப்­ப­தால் அவ்­வாறு வரி செலுத்­து­வது சவா­லான காரி­யம் என்­றார் அவர்.

சிக­ரெட், சூதாட்­டம் முத­லி­ய­வற்­றுக்கு வரி உயர்த்­து­வது குறித்து திரு ஜேமஸ் லிம்­மின் பரிந்­து­ரை­யைக் குறிப்­பிட்டு பதி­ல­ளித்த திரு வோங், அவ்­வாறு செய்­தால் குறைந்த வரு­மா­ன­ம் உடையோர் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றார்.

ஜிஎஸ்டி உயர்­வால் அவர்­கள் பாதிப்­ப­டை­வார்­கள் என்று கரு­தும் பாட்­டா­ளிக் கட்சி இந்­தப் பரிந்­து­ரை­யில் மட்­டும் ஏன் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­கிறது என்று கேள்­வி­யெ­ழுப்­பி­னார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!