சிவாலயங்களில் சிறப்பு தரிசனம்

கிரு­மித்­தொற்று உச்­சத்­தைத் தொடும் தற்­போ­தைய கால­கட்­டத்­தில் கூடு­தல் பாது­காப்­பு­டன் இவ்­வாண்­டின் மகாசிவ­ராத்­திரி விழா நடை­பெற்­றது. கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவில் மகா சிவ­ராத்­திரி விழா­வில் 6,000க்கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்­ட­னர்.

அங்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அள­வில், முதல் கால பூஜை தொடங்கி நேற்று அதி­காலை 5 மணிக்கு திருக்­கல்­யாண பெரு­வி­ழா­வு­டன் நிறை­வு­பெற்­றது. பக்­தர்­கள் அனை­வ­ரும் ஒத்­து­ழைத்­தது கொண்­டாட்­டங்­க­ள் சமூகமாக நடக்க முக்­கிய கார­ண­மாக இருந்­த­தாக ஆல­யத்­தின் துணைத் தலை­வர் சுசிலா கணே­சன், தமிழ் முரசி ­டம் தெரி­வித்­தார்.

தடுப்­பூசி முழு­மை­யா­கப் போட்­ட­வர்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். அத்­து­டன் இரவு முழு­வ­தும் ஆல­யத்­தில் தங்­கு­வ­தற்கு பொது­மக்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வி­ழா­விற்கு மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங் சிறப்பு விருந்­தி­ன­ராக வரு­கை­ அளித்­தார். டாக்­டர் டானும் மெக்­பர்­சன் தனித்­தொ­குதி நாடாளுமன்ற உறுப்­பி­னர் டின் பெய் லிங்கும் பால்­கு­டம் ஏந்தி வந்து சன்­னி­தி­யின் முன் சமர்ப்­பித்­த­னர். 4 காலங்­ க­ளி­லும் பக்­தர்­கள் வந்து பால்­கு­டம், சந்­த­னக்­கு­டம், திரு­நீற்­றுக்­கு­டம் முத­லியவற்­றைச் சமர்ப்­பித்­த­னர்.

இந்­தி­ய­ரை மணம் புரிந்த மேண்டி டான், 28, என்பவர் முதன்­மு­றை­யாக மகா­சி­வ­ராத்­திரி திரு­வி­ழா­வில் கலந்து­ கொண்­ட­தாக தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"இது எனக்கு மாறு­பட்ட அனு­ப­வ­மாக இருந்­தா­லும் என் கண­வ­ரின் குடும்­பத்­தி­ன­ரு­டன் வந்­த­தில் மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த ஆண்டு மீண்­டும் வர­லாம் என எண்­ணு­

கி­றேன்," என்று அர­சாங்க ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றும் அவர் கூறி­னார்.

கொவிட்-19ன் தொடக்­கத்­திற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக மகா சிவ­ராத்­தி­ரிக்­காக இங்கு வந்த பாஸ்­கர சேது­பதி, 47, சிறிது நேரம் தங்க முடிந்­தா­லும் சிறப்­பான ஏற்­பா­டு­க­ளால் மன­நி­றைவு அடைந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

இவ்­வாண்­டின் விழா­வுக்­கா­க 170,000 ருத்­ராட்ச மணி­க­ளால் செய்­யப்­பட்ட சிவ­லிங்­கம் அமைக்­கப்­பட்­டி­ருந்தது. இத­னைக் கண்­ட­போது மன­திற்கு மிக­வும் நெகிழ்ச்­சி­யாக இருந்­த­தாக உமா­தேவி முரு­கையா, 50, கூறி­னார்.

இதேபோல சிங்­கப்­பூ­ரி­லுள்ள பல்­வேறு சிவால­யங்­களிலும் பக்­தர்­கள் நேற்று அதி­காலை வரை கண்­வி­ழித்­துச் சிறப்பு வழி­பா­டு­களில் பங்கேற்றனர்.

புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­ய மகா சிவ­ராத்­தி­ரி விழா வில் சுமார் 1,000 பக்­தர்­கள் கலந்து­ கொண்­ட­தாக ஆல­யத்தின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. நான்கு கால பூஜை­களில் ஒவ்­வொரு காலத்­திற்­குப் பிற­கும் வெளி­யே­று­மாறு பக்­தர்­கள் கேட்­டுக்­கொள்ளப்பட்டதாக ஆல­யத்­தின் செய­லா­ளர் அண்­ணா­துரை அழ­கப்­பன் கூறி­னார்.

ஸ்ரீ சிவ­கி­ருஷ்ணா ஆல­ய விழா­வின் தொடக்­கம் முதல் இறுதி வரை எந்­நே­ரமும் கிட்­டத்­தட்ட 100 பேர் வரை இருந்­த­தாக ஆலயத் தின் செய­லா­ளர் ரோய் கோபி

­நா­தன் தெரி­வித்­தார்.

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆல யத்தில் சுமார் 2,000 பக்தர்கள் திரண்டதாக ஆலய அறங்காவலர் பாலகிருஷ்ணன் சுந்தர்ராஜ் கூறி னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!