உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தேசிய சேவையாளர் மரணம்

உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 25 வயது சிங்கப்பூர் ஆயுதப் படை தேசியச் சேவையாளர் ஒருவர் நேற்று (மார்ச் 2) மயங்கி விழுந்து மாண்டார்.

சுகாதார மேம்பாட்டு வாரியம் ஏற்பாட்டில் ‘ஹிட்’ எனப்படும் அதி தீவிர உடற்பயிற்சிக்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது அந்த நபர் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்பாப்பு படைக்கு இரவு சுமார் 7.40 மணியளவில் அழைப்பு வந்தது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் கொண்டுச்செல்லப்பட்டார். மருத்துவமனையைச் சென்றடைந்த சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் அனைத்து ‘ஹிட்’ வகுப்புகள் மார்ச் 6ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு வாரியமும், தற்காப்பு அமைச்சும் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!