டிரேஸ்டுகெதர், சேஃப்எண்ட்ரி செயலிகள் இன்னமும் முக்கியம்

சிங்கப்பூரில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் டிரேஸ்டுகெதர், சேஃப்எண்ட்ரி ஆகிய இரண்டு செயலிகளும் இன்னமும் முக்கிய பங்காற்றுவதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அடிப்படையிலான வேறுபட்ட அணுகுமுறை இனி தேவையில்லை என்ற ஒரு நிலை வரும் வரை அந்தச் செயலிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத மக்களுக்குக் கிருமி தொற்றினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். அவர்களைப் பாதுகாக்க அந்தச் செயலிகள் தேவைப்படுவதாக டாக்டர் ஜனில் விளக்கினார்.

கொரோனாவுக்கு எதிரான விதி முறைகள், நிபந்தனைகள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவற்றுக்கான தேவை பற்றி வழக்கமாக மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறிய அவர், பாதுகாப்பு இடைவெளி போன்றவை தொடர்ந்து எளிமையாக்கப்படும் என்றார்.

அதிகாரிகள் விரைந்து ஆபத்து பற்றி எச்சரிக்கவும் கடிதம் அனுப்பவும் அந்தச் செயலிகள் உதவுகின்றன. இதனால் கிருமி தொற்றும் ஆபத்துள்ள மக்கள் முன்னதாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு முன்கூட்டியே உதவி நாடுகிறார்கள். இவை காரணமாக உயிருடற் சேதம் குறைகிறது. கிருமி பரவும் வேகமும் மங்குகிறது.

ஆகையால், இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துவதில் சுமை இருந்தாலும் இவற்றால் பலன்கள் அதிகம் என்றார் அமைச்சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!