கைதிகளுக்கு மின்னிலக்கத் திறன்களைக் கற்றுத் தர புதிய திட்டம்

சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­பின் சமூ­கத்­தில் மீண்­டும் இணை­யத் தயா­ரா­வ­தற்­குக் கைதி­க­ளுக்கு உத­வும் வகை­யில், அவர்­க­ளுக்கு அடிப்­படை மின்­னி­லக்­கத் திறன்­களைக் கற்­றுத் தர ஒரு புதிய திட்­டம் தொடங்­கப்­படும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்து இருக்­கி­றார்.

மஞ்­சள் நாடா திட்­டத்­தின்­கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஒரு புதிய மின்­னி­லக்­கக் கல்வி பெருந்­திட்­டத்­தின்­கீழ் அத்­திட்­டம் வரும். இதன்­மூ­லம் ஆண்­டுக்­குக் கிட்­டத்­தட்ட 700 கைதி­கள் பயன் அடைவர்.

கடந்த 2019ஆம் ஆண்டு சிறை­வா­சம் முடிந்து விடு­த­லை­யா­னோ­ரில் 20 விழுக்­காட்­டி­னர் அடுத்த ஈராண்­டிற்­குள் மீண்­டும் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர் அல்­லது கடுமை குறைவான குற்­றங்­க­ளுக்­காக சமூ­கம் சார்ந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்­ட­னர்.

விடு­த­லை­யான ஈராண்­டிற்­குள் மீண்­டும் குற்­றம் புரி­வது ஆகக் குறை­வாக இருக்­கும் நக­ரங்­க­ளுள் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்று திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான பின்­னும் தொடர்ந்து மருத்­து­வப் பரா­ம­ரிப்பு தேவைப்­படும் முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் அடுத்த கட்ட சிகிச்­சைக்­காக சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யின் நிபு­ணத்­துவ மருந்­த­கங்­க­ளுக்­குப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வர் என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!