பன்முக அமைப்பை ஆதரிப்பது மிக முக்கியம்: அமைச்சர் விவியன்

பெரிய, வலி­மை­மிக்க எதி­ரா­ளியை எதிர்­கொள்­ளும்­போது சிறிய நாடு­கள் எவ்­வ­ளவு எளி­தாக பாதிக்­கப்­படும் அபா­ய­முள்­ளது என்­பதை உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு நினை­வு­றுத்­து­வ­தாக உள்­ளது என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இப்­போ­தைய சூழ­லில், அத்­த­கைய சிறு நாடு­கள், வலி­மை­யான ஒன்­று­பட்ட நாடு­க­ளா­கத் தொடர வேண்­டி­ய­தும் அனைத்து நாடு­களின் நலன்­க­ளை­யும் கருத்­தில்­கொள்­ளும் ஆற்­றல்­மிக்க பன்­முக அமைப்­பாக இருக்க வேண்­டி­ய­தும் அவ­சி­யம் என்று டாக்­டர் விவி­யன் கூறி­னார்.

வெளியுறவு அமைச்­சின் வர­வு­செ­லவுத் திட்­டம் தொடர்­பான விவா­தத்­தின்­போது நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­றிய அமைச்­சர், சிங்­கப்­பூ­ரின் நலன்­க­ளைப் பாது­காக்கும் ஒரு தளத்தை அமைத்­துத் தர­வல்ல, விதி­மு­றை­கள் சார்ந்த பன்­முக ஆணையை வலுப்­ப­டுத்­து­வ­தில் தனது பங்கை ஆற்ற சிங்­கப்­பூர் தன்­னா­லான அனைத்­தை­யும் செய்­யும் என்­றார்.

"அத­னால்­தான், சிறிய நாடு­கள் மன்­றத்தை நிறு­வு­வ­தில் பல்­வேறு வட்­டார நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் இணைந்து பணி­யாற்­றி­யது," என்­றார் டாக்­டர் விவி­யன்.

அம்­மன்­றம் இவ்­வாண்­டில் 30வது ஆண்டு­நி­றை­வைக் கொண்­டா­டு­கிறது.

சிங்­கப்­பூர் எந்த ஒரு தரப்­பிற்­கும் ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுக்­காது என்று மீண்­டும் வலி­யுறுத்­திக் கூறிய அமைச்­சர், ஆயி­னும் இருத்­த­லி­யல் கொள்­கை­களை உறு­திப்­ப­டுத்­தும் நிலைப்­பாட்டை எடுக்­கும் என்­றும் சொன்­னார்.

ஐநா பொதுச் சபை­யில் நேற்று முன்­தி­னம் நடந்த வாக்­கெ­டுப்­பில், உக்­ரே­னில் இருந்து தனது படை­களை ரஷ்யா திரும்­பப் பெற வேண்­டும் எனும் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக சிங்­கப்­பூர் உள்­ளிட்ட 141 நாடு­கள் வாக்­க­ளித்­தன.

எல்லா நாடு­க­ளின் வளங்­களும் மக்­களும் இப்­போது ஒன்­றை­ ஒன்று, ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் சார்ந்­தி­ருப்­பது அதி­க­ரித்து வரு­வ­தாக அமைச்­சர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

இத்தகைய சூழலில், "இரண்­டாம் உல­கப் போருக்­குப்­பின், அமை­திக்­கும் வளப்­பத்­திற்­கு­மான வழி­மு­றை­களாக பன்­மு­கத்­தன்­மை­யும் பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­பும் விளங்கி வரு­கின்­றன," என்­றும் அவர் சுட்­டி­னார்.

கொவிட்-19 சூழ­லில் தன்­னைப்­பே­ணித்­த­னம் அதி­க­ரித்து வரு­வது, கட்­டற்ற, திறந்த, விதி­மு­றை­கள் சார்ந்த பல­த­ரப்பு வணி­க­மு­றை­யின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­து­வதாக உள்­ளது என்­றும் அமைச்­சர் விவி­யன் சொன்­னார்.

"நமது பொரு­ளி­யல் உத்­தி­யின் இன்றி­ய­மை­யாத தூணாக விளங்­கு­ம் பொருளியல் ஒருங்கிணைப்பை நாம் இரட்­டிப்­பாக்க வேண்­டி­ய­தும் மறு­வு­று­திப்­படுத்­து­வ­தும் முக்­கி­யம்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!