மேலும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உலகமயமாக, உருமாற ஆதரவு

சிங்­கப்­பூரின் சிறிய, நடுத்தர நிறு­வனங்­கள் உல­க­ள­வி­லான போட்­டித்­தி­ற­னு­டன் விளங்கு­வ­தற்கு அர­சாங்­கம் கூடு­தல் உதவி வழங்­க­விருப்­ப­தாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சிக்­கும் உரு­மாற்­றத்­துக்­கும் அது தொடர்ந்து கைகொ­டுக்­கும் என்று இரண்­டாம் வர்த்­தக, தொழில் அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூர் நிறு­வ­னங்­கள் தொடர்­பில் அர­சாங்­கத்­தின் நீண்­ட­கா­லத் திட்­டத்­துக்­கான இரண்டு முக்­கிய உத்­தி­கள் அவை என்­றார் டாக்­டர் டான். வருங்­கா­லத்­துக்கு ஏற்ற தயார்­நி­லை­யி­ல் உள்ள, உலக வாய்ப்புக­ளைக் கைப்­பற்­றும் திறனுடன் கூடிய உள்­ளூர் நிறு­வனங்­களை உரு­வாக்கி, நிலைத்­தி­ருக்­கச் செய்­வது அர­சாங்­கத்­தின் நோக்­கம் என்று அவர் தெரிவித்தார்.

அத­னை­யொட்டி, இந்த ஆண்டின் பிற்­பா­தி­யில் 'சிங்­கப்­பூர் அனைத்­து­லக மேலாண்மைச் செயல்திட்­டம்' எனும் புதிய திட்­டம் தொடங்­கப்­படும். 'என்டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு அதனை வழி­நடத்­தும்.

திட்­டத்­தின் கீழ், உள்­ளூ­ரில் இளைய திற­னா­ளர்­களை உரு­வாக்க நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­படும். அந்­தத் திற­னா­ளர்­கள் வட்­டார, அனைத்­து­லக அளவில் தலை­மைத்­து­வப் பத­வி­களை ஏற்­றுப் பணி­யாற்­றுவர்.

நிறு­வ­னங்­கள் அவற்றுக்­குத் தேவை­யான திற­னாளர்­களை அணு­கு­வதை உறு­திப்­ப­டுத்த அர­சாங்­கம் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வி­ருக்­கிறது என்ற கேள்­விக்­கு வர்த்­தக, தொழில் அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தத்­தின்­போது பதி­ல­ளித்த டாக்­டர் டான் புதிய திட்­டம் குறித்து அறி­வித்­தார்.

அனைத்­து­ல­கப் போட்­டித்­திறனுடன் விளங்­கக்­கூ­டிய தகுதி உடைய கூடு­த­லான நிறு­வ­னங்களை அடை­யா­ளம்­ கா­ண­வும் அவற்­றின் வளர்ச்­சிக்­குக் கைகொ­டுக்­க­வும் சிங்­கப்­பூர் அதன் முயற்­சி­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தும் என்று டாக்­டர் டான் குறிப்­பிட்­டார்.

'என்டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்', பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம், அர­சாங்­கத்­தின் இதர அமைப்­பு­களு­டன் பங்­கா­ளித்­துவ நிறு­வ­னங்­களும் அதற்கு ஆத­ர­வ­ளிக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!