சிலரே ரத்து செய்துள்ளனர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிடிஓ வீட்டை முன்பதிவு செய்துள்ள உரிமையாளர்கள்

கொவிட்-19க்கு முந்­தைய ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது, 2020, 2021ஆம் ஆண்­டு­களில், தேவைக் கேற்ப கட்­டப்­படும் (பிடிஓ) வீடு­களுக்­காக நீண்ட காத்­தி­ருப்பை எதிர்­கொண்ட போதி­லும், குறை­வான வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் பிடிஓ விண்­ணப்­பங்­களை ரத்து செய்­யக் கோரி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் (வீவக) பர­ப­ரப்­பான மறு­விற்­பனை சந்தை, 2020 முதல் காலாண்­டில் இருந்து 2021 இறுதி வரை வீட்டு விலை­கள் சுமார் 15% உயர்ந்­துள்­ளது.

வீட்டை வாங்­கு­ப­வர்­களில் சிலர் 'பாது­காப்­பான மற்­றும் மலி­வான' பிடிஓ வீட்­டைத் தேர்ந்­தெ­டுத்­த­தால், குறை­வான ரத்­துக்­கான முக்­கிய கார­ணங்­களில் ஒன்­றாக இருந்­தி­ருக்­க­லாம் என்று சொத்து ஆய்­வா­ளர்­கள் தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறி­னார்.

2020, 2021ஆம் ஆண்­டு­களில், ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 3,640 வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் பிடிஓ வீட்டு விண்­ணப்­பங்­களை ரத்து செய்­யக் கோரி­யுள்­ள­னர். இது 2018, 2019ஆம் ஆண்­டு­களில் பெறப்­பட்ட ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 4,020 கோரிக்­கை­களை விடக் குறைவு என்று கழ­கத்­தின் புள்ளி விவ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

2020, 2021ஆம் ஆண்­டு­களில் பெறப்­பட்ட கோரிக்­கை­களில், ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 1,850 வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் விண்­ணப்­பங்­களை ரத்து செய்­த­னர். இது 2018, 2019ல் ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 2,500 ரத்­து­களை விடக் குறைவு.

விண்­ணப்­ப­தா­ரர்­கள் தங்­கள் கோரிக்­கை­களை மீட்­டுக்­கொள்ள முடிவு செய்­ய­லாம் என்­ப­தால், அது ரத்து செய்வதற்கான உண்மையான கோரிக்கைகளின் எண்­ணிக்­கையை விட குறை­வாக உள்­ளது என்று வீவக கூறி­யது.

கொவிட்-19 தொற்­றுக்கு முந்­தைய ஆண்­டு­களில் பிடிஓ வீடு­க­ளுக்­கான காத்­தி­ருப்பு காலம் மூன்று முதல் நான்கு ஆண்­டு­க­ளாக இருந்­தது. அது இப்­போது சரா­ச­ரி­யாக நான்­கி­லி­ருந்து ஐந்து ஆண்­டு­க­ளாக மாறி­யுள்­ளது.

பிடிஓ வீடு­க­ளுக்­காக நீண்ட காலம் காத்­தி­ருக்­கும்­போது, வீடு வாங்­கு­ப­வர்­கள் பொறு­மை­யி­ழந்து, ரத்­து­செய்து வீவக மறு­விற்­பனை வீடு­க­ளுக்­குத் திரும்­பு­வார்­கள் என­இஆர்ஏ ரியல்டி சொத்து முக­வர் நிறு­வ­னத்­தின் ஆய்வு மற்­றும் ஆலோ­ச­னைப் பிரி­வின் தலை­வர் திரு நிக்­க­லஸ் மாக் கூறி­னார்.

குறிப்­பாக முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் உள்ள பிடிஓ வீட்டு விலை அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால், போதிய பணம் இல்­லாத சிங்­கப்­பூ­ரர்­கள் வீவக மறு­விற்­பனை வீடு­க­ளைக் குறைந்த விலை­யில் வாங்க முடி­வெ­டுக்­க­லாம் என்­றார் ஆரஞ்ச்டீ அண்ட் டீ நிறு­வ­னத்­தின் மூத்த உத­வித் தலை­வர் திரு­வாட்டி கிறிஸ்­டின் சன்.

முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் பிடிஓ திட்­டங்­கள் 2017ல் இருந்த 44 விழுக்­காட்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 2020ல் சுமார் 55 விழுக்­கா­டாக இருந்­தது.

கடந்த ஆண்டு, ஆறு பிடிஓ திட்­டங்­கள் அவற்­றின் முக்­கிய ஒப்­பந்­த­தா­ரர்­கள் செய­லி­ழந்­த­தால் மேலும் தாம­தம் அடைந்­தன.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் 90க்கு மேற்­பட்ட பிடிஓ வீட்­டுத் திட்­டங்­கள் நடப்­பில் உள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!