நிதி முறைகேட்டை எதிர்க்கும் உலக அமைப்புக்கு சிங்கப்பூரர் ராஜா குமார் தலைவர் ஆகிறார்

நிதி முறைகேட்டை எதிர்த்துப் போராடும் உலகளாவிய அமைப்பு ஒன்றுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த T ராஜா குமார் தலைமை தாங்க உள்ளார்.

நிதிச் செயல் பணிக்குழு (Financial Action Task Force) எனும் அந்த அமைப்புக்கு சிங்கப்பூரர் ஒருவர் தலைவர் ஆவது இதுவே முதல் முறையாகும்.

பன்னாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பான நிதிச் செயல் பணிக்குழு, கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றுதல், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் போன்றவற்றை எதிர்த்து செயல்படுகிறது.

திரு ராஜா குமார் இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி அமைப்பின் தலைவராகப் பொறுப்பு ஏற்பார். இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் அவர் நீடிப்பார்.

கடந்த 1992ல் அமைப்பில் சேர்ந்த பின்னர் சிங்கப்பூர் முதன்முறையாக அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது என்று உள்துறை, நிதி அமைச்சுகளும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கூறின.

அவை திங்கட்கிழமை (மார்ச் 7) அன்று விடுத்த கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தன.

திரு ராஜா குமார் தற்போது உள்துறை அமைச்சில் அனைத்துலக விவகாரங்களுக்கு மூத்த ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!